flashvortex.

Friday, December 9, 2011

இத்தாலியில் மாஃபியா கும்பல் தலைவர் பிடிபட்டார்

இத்தாலியில் கமோர்ரா எனப்படும் சட்டவிரோத குற்ற வலயமைப்பின் மிகச் சக்திவாய்ந்த தலைவரான மைக்கேல் ஸகாரியா என்பவரைத் தாங்கள் பிடித்துள்ளதாக அந்நாட்டின் பொலிசார் கூறுகின்றனர்.

கடந்த பதினாறு வருடங்களாக இவர் சட்டத்தால் தேடப்பட்டு வந்த ஒரு நபர்.

நேப்பில்ஸ் நகரருகேயுள்ள தனது சொந்த ஊரில் நிலத்தடியில் இருந்த ஒரு ரகசிய அறையிலிருந்து இவர் பிடிபட்டார்.

கமோர்ரா குற்ற வலயமமைப்பில் உள்ள ஒன்றான கஸாலெஸி பிரிவின் தலைவர் இந்த ஸகாரியா ஆவார்.

நேப்பில்ஸ் நகர் அமைந்துள்ள காம்பானியா வட்டாரத்தில் நிழலுலக வேலைகளில் கஸாலெஸி பிரிவு ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது.

ஸகாரியா பிடிபட்டாலும் கமோர்ரா வலயமைப்பின் வேறு பல குற்றக்கும்பல் தலைவர்கள் இன்னும் சட்டத்தின் பிடியில் சிக்காமலே உள்ளனர்.

No comments:

Post a Comment