
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, டில்லியில் நேற்று விழா நடந்தது. இதில், பங்கேற்ற மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத், செய்தியாளர்களிடம் கூறியதாவது: எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றவர்களால் பாகுபாடாக நடத்தப்படுவது வருத்தம் அளிக்கிறது.
இதை தவிர்க்கும் வகையில், புதிய சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் துவங்கி விட்டன. இதற்கான சட்ட வரைவு, அடுத்த 10 நாட்களில், சட்ட அமைச்சகத்திடம் இருந்து, சுகாதார அமைச்சகத்துக்கு வந்து விடும். இவ்வாறு குலாம் நபி ஆசாத் கூறினார்.
No comments:
Post a Comment