flashvortex.

Friday, December 23, 2011

யாழ் பத்திரிகைகள் தொடர்பாக மக்களின் எதிர்பார்ப்பு...... 'ஊடகங்கள் உண்மையை கூறவேண்டும';

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இணையத்தளம் மிக முக்கிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. எது எவ்வாறு இருப்பினும் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் அதிகாலை பத்திரிகை பார்க்கா விட்டால் எமக்கு விடியாதது போல் உள்ளது என்று கூறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்
பத்திரிகைகள் மக்கள் மத்தியில் எவ்வாறான மாற்றத்தைக்கொண்டு வருகின்றன என்பது தொடர்பாக யாழ் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மைய மாணவர்கள் ஒரு ஆய்வினை மேற்கொண்டனர்
ஆறு விதமான கோணங்களில் ஆய்வுகளை எடுத்தனர் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், கூலி வேலை செய்பவர்கள்;, யாழ் பல்கலைக்கழக, மாணவர்கள் பத்திரிகை விற்பனை செய்யும், இடங்கள் அரசாங்கஅதிகாரிகள் போன்றோர் எதற்காகப் பத்திரிகை படிக்கின்றனர்? செய்திகளைப் படிக்கும் போது எவ்வாறான மாற்றம் ஏற்படுகின்றது? என்பதே எமது தேடலாக இருந்தது
 
 பத்திரிகைகள் தொடர்பாக அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் ஒரு நாள் பத்திரிகையில் வெளியாகும் செய்தி மறுநாள் வேறு பத்திரிகைகளில் வேறு தலையங்கங்களுடன் வெளிவருகின்றன.  ஊடகங்கள் உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும், மாணவர்களின்; கல்வித் தேவைகளை ஊடகங்கள்; நிறைவு செய்கின்றன. இது வரவேற்கத் தக்கது என்றனர் .

அத்துடன் பத்திரிகைகளில் அதிகளவு மரணஅறிவித்தல்களும், விளம்பரங்களும் வெளிவருகின்றனே அவை குறைய வேண்டும்  உள்நாட்டு விளையாட்டுச் செய்திகள் வெளிவருவது குறைவு அதிகளவு வெளிவரவேண்டும் அப்போது தான் அறிய முடியும் என்றார்கள். நாட்டின் அசாதாரன மாற்றங்களைப்பொறுத்;தே பத்திரிகைகளின் விற்பனை நிலை அமைகின்றது

பத்திரிகை வெளியாகும் இடங்களில் கேட்டபோது; பத்திரிகை வாங்குபவர்கள் முதலில் தலைப்புச் செய்தியையே வாசிப்பார்கள் வேண்டியவுடனே கடை வாசலில் தலைப்புச் செய்திகளை வாசித்துக்கொண்டே செல்வார்கள்.

 கார்திகேசு(46) பத்திரிகை விற்பனையாளர் ' பத்திரிகைகளில் விளம்பரங்களையே அதிகம் எதிர்பார்க்கின்றோம் விளம்பர செய்திகளையே படிக்கின்றோம் ஏனென்றால் விளம்பரங்களே விற்பனையை தீர்மானிக்கின்றன. விற்பனையை பெருக்கிக்கொள்ள அவை உதவுகின்றன.என்றனர்.

மாணவர்களைப்பொறுத்தவரை விளையாட்டுச்செய்திகளையும், கல்வி தொடர்பான செய்திகளையும், சினிமாச் செய்திகளையுமே அதிகம் எதிர்பார்க்கின்றனா.; பொதுமக்களைப்பொறுத்தவரை பத்திரிகைகள் உள்ளுர் செய்திகளுக்கு அதிக முக்கியத்தவம் கொடுப்பதில்லை எனவும் கூறப்பட்டது இது தொடர்பில் நாவாந்துறை வாசியான இ. மாணிக்கம் என்பவரிடம் கேட்டபோது ஊடகங்கள் பொறுப்புடன் செயற்படுவதில்லை தாழ்த்தப்பட்ட மக்களின் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை இதனால் நான் பத்திரிகைகள் வாசிப்பதையே விரும்பவதில்லை பத்திரிகை நிறுவனங்கள் தமக்குள்ளேயே அடிபட்டுக்கொள்கின்றன ஒன்றை ஒன்று குறை கூறும் செய்திகளே அதிகம் வெளிவருகின்றன முதலில் ஊடகங்கள் தமக்குள் ஒற்றுமையாக இருக்கவேண்டும் அதன் பின்னர் மக்களின் பிரச்சனைகளுக்காக வர வேண்டும். ஊடக நிறுவனங்கள் மக்களுக்காகச் செயற்பட வேண்டும். அப்போதே நடுநிலையான செய்திகள் வெளிவரும் பக்கச்சார்பு இல்லாத ஒரு பத்திரிகையை உங்களால் காட்டமுடியுமா? என்ற கேள்வியையும் கேட்டார்;;. இவ்வாறான கருத்துக்கள் இன்னும் எத்தனை பேரிடம் இருக்கின்றதோ தெரியாது. இப்போது இருக்கும் ஊடகங்களின் நிலைப்பாடுமாற வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஊடகங்கள் உண்மைக்காக செயற்பட வேண்டும் அப்போதே ஒடுக்கப்பட்ட சமுதாயம் மறுமலர்ச்சி அடையும் மக்களும் ஊடகங்களை நம்புவர் ; என்று மேலும் தெரிவித்தார்.
 
இதே போன்று பாடசாலை மாணவனான சி. கிருசாந்( யாழ் மத்திய கல்லூரி உயர்;தர வகுப்பு) கூறும்போது பத்திரிகைகளை நான் தினமும் வாசிப்பேன் அன்றாட செய்திகள் தகவல்களை அறிந்து கொள்வதில் அதிக நாட்டம் உள்ளது. விளையாட்டுச் செய்திகளை விரும்;பிப்படிப்பேன். என்று கூறினார் மேலும் அவர் தெரிவிக்கையில் பத்திரிகையில் அதிகம் சினிமாத் தகவல்கள் விளம்பரங்கள் வெளிவருவது குறைக்கப்படுதல் நல்லது என்றும் தெரிவித்தார்.
பாடசாலை ஆசிரியர்கள் தெரிவிக்கையில் மாணவர்களுக்குப் பயன்பாடான செய்திகள் தகவல்கள் வெளிவருவது நல்லது என்றார் சில பத்திரிகைகள் பரீட்சைக் காலங்களில் பயிற்ச்சி வினாக்களை வெளியிடுவதும் குறிப்பிடத்தக்கது மேலும் யாழ் நாவலர் மகாவித்தியாலய ஆசிரியரர் திருமதி க.சுகுமார் தெரிவிக்கையில் பத்திரிகைகள் சிலது நல்லதையும் சொல்லுது சிலது வன்முறையையும் தோற்றுவிக்கின்றது மாணவர்களுக்கு நன்மையான தகவல்களை வழங்க வேண்டியது ஊடகங்களின் கடமை ஆனால் சில பத்திரிகைகள் அதனைச்செய்ய தவறிவிடுகின்றன. பத்திரிகைகளில் இடம்பெறும் கிசுகிசுக்களால் சிலமாணவர்கள் தவறான பாதையில் வழிநடத்தப்பட்ட சம்பவங்களும் இருக்கின்றன என்று தெரிவித்தார். இதன்மூலம்  பத்திரிகைகளில் பொதுமக்கள் உண்மையையே எதிர்பார்க்கின்றனர்.என்ற தவலை பெற்றுக்கொள்ள முடிந்தது.
 

No comments:

Post a Comment