flashvortex.

Wednesday, December 21, 2011

உயிரா? உண்மையா?

 யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் குற்றச் சம்பவங்கள் தொடர்பாக யாழ்மக்களிடம் கேட்டபோது எல்லா மக்களிடமும் இருந்து வந்த பதில் 'எங்களுக்கு நடந்தது, நடக்கிறது தெரியும் ஆனால் எம்மால் எதுவுமே  சொல்லமுடியாது. ஏங்களை எதுவுமே கேட்க வேண்டாம். நீங்கள் கேட்டிட்டு போய் கண்டபடி எழுதுவீர்கள் பிரச்சனை எங்களுக்குதான்.அது உங்களுக்கு தெரியாது'  இதே பதில்தான் யாழ்நகரின் பல பகுதிகளிலும் எங்களுக்குத் தெரியும் ஆனால் சொல்லமாட்டோம் என்ற பதில்தான் எங்களுக்கு கிடைத்தது. யாழ் நகரின் பல பகுதிகளிலும் எங்களுக்கு கிடைத்தது.



யாழ் நகரில் அண்மைக்காலத்தில் பெரும்பீதியை ஏற்படுத்திய கிறீஸ் மனிதன் பிரச்சனையால் பெரிதும் பாதிக்கப்பட்ட யாழ் நாவந்துறை பகுதியில் மக்கள் மத்தியில் இருக்கும் பயம் ஓயவில்லை. கிறீஸ் மனிதன் பிரச்சனையை தொடர்ந்து இடம் பெற்ற வன்முறை சம்பவங்களின் எதிர் விளைகளிலிருந்து இன்னும் மக்கள் மீண்டெழும்பவில்லை.

பிரச்சனை தொடர்ந்து நாவாந்துறை  பகுதியில் பெண்கள் உட்பட்ட 100க்கு அதிகமானனோர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை எல்லோரும் அறிந்ததே! பெருந்திரளான ஆண்கள் அன்றையதினம் கைது செய்யப்பட்டிருந்தனர். அது தொடர்பான செய்திகளுக்கு யாழ்நகரில் பிரபல பத்திரிகைகள் பலவும் முக்கியம் கொடுத்திருந்தன. ஆனால் இன்று அந்த மக்களின் மனநிலைகள் பிரச்சனையில் இருந்து விடுபடவில்லை. இனியும் அவ்வாறு நடக்கலாம் என்ற பீதியில் நடக்கலாம் என்ற பீதியிலே ஊடகங்களுக்கு செய்திகளைக் கூற மறுக்கின்றனர்.

நாவந்துறைப் பகுதியில பெண்மணி ஒருவரை சந்தித்திருந்தோம். அவரிடம் எம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு கேட்டபோது அவருடைய முகத்தில் ஒரு மாற்றம் தெரிந்தது. உடனே அவர் பெரிய சத்தமாக சிரித்துவிட்டு அவரது கணவனை அழைத்து விடயத்தை கூறினார். அவர் எம்மை உள்ளே அழைத்தார். நாம் அவர் எமது வினாக்களுக்கு விடைகொடுப்பார் என நினைத்து உள்ளே சென்றோம். ஆனால் ஏமாற்றமே காத்திருந்தது.

அவருடைய கருத்துக்கள்!


பிள்ளையள் எங்கே இருந்து வாறீயள். ஒருக்கா இடத்தை சுத்திபாருங்கோ. ஏல்லா இடமும் ஆமி நிற்கிறான். நீங்க வந்து கேட்டிற்றுப் போய் எழுதுவீங்கள் அவங்கவந்து எங்களத்தான் கேட்பாங்க. ஏற்கனவே கொண்டுபோய் அடிச்சவங்கள் போங்கோ அங்க நிற்காதைங்கோ எனக்குமட்டுமல்ல இங்க இருக்கிற எல்லோருக்கும் இங்கே நடந்தது தெரியும். ஆனா ஒருத்தரும் சொல்ல மாட்டார்கள். ஆப்படி சொன்னா என்ன நடக்குமென்று அவர்களுக்கு தெரியும். எல்லோருக்கும் பிள்ளை குட்டியள் குடும்பம் இருக்கு என்றார்.
இவ்வாறாக இன்றும் எத்தனை நாட்களுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் மீண்டும் அடக்குமுறைக்குள்ளேயே வாழப்போகிறார்கள்? இந்த சமூகம் இன்றும் மாறப்போவதில்லை என அவர்களது கருத்துக்கள் எங்களுக்கு புலப்படுத்தின.

நாவாந்துறை பகுதியில் எமக்கு ஒரு ஆச்சரியமாக அமைந்தது உள்ளே நுழைந்தவுடனே அங்குள்ள இராணுவ காவலரணில் அனுமதி பெற்றே மக்களுடன் கலந்துரையாட வேண்டி இருந்தது. இந்த நிலை அம்மக்கள் எவ்வாறான பிரச்சனைக்குள் சிக்கியுள்ளனர் என்பதை எமக்கு உணர்த்தி இருந்தது. இந் நிலையில் நாவாந்துறை பகுதியில் மாத்திரமல்லாது தமிழர் குடியிருகு;கும் பல பகுதிகளிலும் இருப்பது தெரிந்தது.

குற்றம் தொடர்பில் எந்த கருத்துக்களையுமே மக்கள் எம்மிடம் கூற மறுக்கின்ற எம் சமூகம் யாரிடம் அதை சொல்லி தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ளப் போகிறார்கள்?யாரிடம் தமது கருத்தை கூறிக் கொள்ள போகுறார்கள்? முதலில் மக்கள் மத்தியில் உறைந்துள்ள பீதிகள் விலக வேண்டும். அவை விலகவேண்டும். அவை விலகிப் போகும்போதே அடக்கு முறைகள் இல்லாத சமூகம் தோற்றம் பெறும்.
 

1 comment:

  1. உண்மையைக் கூறி அதன்மூலம் ஏற்படும் உயிரிழப்பால் பலர் நன்மை அடைவார்கள் எனில் தயக்கமின்றி உண்மையைக் கூறு. அதுவே பயனற்ற நிலை எனில் பொய் கூறாதே மெளனத்தை கடைப்பிடி..இதை எதிர்மறையாகவும் எடுத்துக்கொள்ளுங்கள். (பொய்)

    ReplyDelete