flashvortex.

Tuesday, December 13, 2011

பிரான்ஸ் செல்ல யாழ் மக்களுக்கு அரிய வாய்ப்பு

குடியுரிமையுடன் பிரான்சில் வாழும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் தமது சொந்தங்களை பிரான்ஸ்சிக்கு அழைக்க விரும்பினால் அந்த கோரிக்கை சாதகமாகப் பரிசீலிக்கப்படும் என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரைன் றொடிச்சன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமாருடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறே தெரிவித்துள்ளார்.


இச் சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்களாவன,

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் பிரான்ஸ் நாட்டில் சட்டபூர்வமான பிரஜைகளாக இருந்தால் அவர்கள் இலங்கையில் உள்ள தமது குடும்ப அங்கத்தவர்களையும் தங்களுடன் பிரான்ஸுக்கு அழைக்க விரும்பினால் அந்தக் கோரிக்கை பற்றிச் சாதகமாகப் பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.

பிரான்ஸ் தூதுவர் குடாநாட்டின் சகல விடயங்கள் தொடர்பாக அறிவதிலும் முழுமையாக கவனம் செலுத்தினார். இங்கு நேரடியாக இடங்களைப் பார்வையிட்ட அவர் அரசின் அபிவிருத்திப் பணிகள் இடம் பெற்ற போதும் தனியார் கட்டமைப்புகள் ஊடான அபிவிருத்திகள் இடம் பெறவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் செயற்பாடுகள் எவ்வாறு உள்ளன? மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் தொடர்பாக மக்களிடமிருந்து ஏதாவது முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளனவா என்றும் அவர் என்னிடம் கேள்விகளை எழுப்பினார்.

No comments:

Post a Comment