
பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த நியாப் நிறுவனத்தின் பிக்கப்ரக வாகனம் கரணவாய் இமையாணன் பகுதியில் தனது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக இருந்த பனைமரம், மின்சாரக்கம்பம் ஆகியவற்றுடன் மோதிச்சென்று இறுதியாக கடையொன்றின் சுவருடன் மோதி விபத்துக்குள்ளானது.
துன்னாலை வடக்கைச் சேர்ந்த வாகனச் சாரதியான கணேசமூர்த்தி பார்த்தீபன் (வயது 22), கரவெட்டி வடக்கைச் சேர்ந்த செல்வநாயகம் கோபிநாத் (வயது 23) ஆகிய இருவருமே உயிரிழந்தவர்களாவர்.
அதேவேளை இவ் விபத்தில், அல்வாய் தெற்கைச் சேர்ந்த அம்பிகைபாலன் செந்தூரன் (வயது 23) என்பவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இவ் விபத்துச் சம்பவம் குறித்து பருத்தித்துறை காவற்றுறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment