flashvortex.

Friday, January 13, 2012

யாழ்பாடிய மண்ணில்பண்பாடிய பறையொலி

தென்னிந்திய நாட்டார் கலைஞன் ஆடலரசு வேணுவுடனான ஒரு சந்திப்பு.......



காலத்தின் மாற்றத்திற்கேற்ப இந்த உலகமும் மாறிக் கொண்டு வருகின்றது. பழமையை மறந்து புதுமையை நாடுகின்றனர் மக்கள். இதனால் ‘பழையன களைதலும் புதியன புகுதலும்” என்ற முதுமொழி  தற்போது வலுப் பெற்று வருகின்றது. பெரியோர்கள் எதற்கு சொன்னார்களோ தெரியாது ஆனால் தற்கால நடைமுறைக்கு இது சாத்தியம் ஆகியுள்ளது.


நாட்டார் கலை என்பது குறித்த ஒரு சமூகத்தை வெளிக்காட்டும் கண்ணாடி. ஆனால் இன்று நாட்டார் கலையை அறிந்து இருப்பவர்கள்  மிகவும் அரிதாகவே உள்ளனர். நாட்டார் கலையை அறிந்த மக்கள் குறைவாக இருந்தாலும் நாட்டார் கலை இன்னும் முற்றாக அழியவில்லை. இதற்கு உதாரணமாக தென்னிந்திய ஆதித்தமிழன் நாட்டார்கலைகளின் கலைஞன் வேனுகோபால் அவர்களின் யாழ்ப்பாண விஜயம்.

தான் கற்ற கலை தன்னோடு மட்டும் அழிந்து விடாது தனது நாட்டுக்கு மட்டுமன்றி பிற நாட்டவருக்கும் கற்றுக் கொடுக்கும் நோக்கிலே அவரது வருகை அமைந்திருந்தது.

குறைந்த கால இடைவெளியில் யாழ்ப்பாண மாணவர்களுக்கு 5வகையான நடனத்தினை (கும்மியாட்டம், சாட்டைக்குச்சியாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், ஆதிவாசி நடனம்) கற்றுக் கொடுத்த பெருமை இவரையே சாரும்.

நாட்டார் கலைஞரும் சட்டத்தரணியுமான வேனுகோபால் யாழ்ப்பாணம் வந்திருக்கும் போது அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த நேரத்தில் அவருடன் உரையாடிய போது……


யாழ்மண்ணை பற்றி உங்களது கருத்து
யாழ்ப்பாணத்துக்கு வர ரொம்ப ஆர்வமாக இருந்தது. கடல்கடந்து இருக்கின்ற அதுவும் தமிழ் நாட்டை போன்று தமிழ் பேசுகின்ற  மக்களை சந்திக்க வந்திருந்த பொழுதுகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது.  யாழ் மண்ணின் மீது நான் கொண்ட காதலின் பால் இந்த மக்களைச் சந்திக்கவும் இந்த மண்ணில் இந்தக் கலையினை நடாத்துவதற்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

நாட்டார் கலைகள் கற்க வந்த மாணவர்களின் ஆர்வம் 
யாழ்ப்பாணத்தில் 30 வருடங்களுக்கு முன்னர் இருந்தவர்களுக்கு இந்தக் கலை பற்றி தெரிந்திருக்கும் ஆனால் இந்த 30 வருட காலகட்டத்தில் எத்தனையோ பிரச்சனைகள் மத்தியில் இவர்கள் வாழ்ந்துள்ளார்கள். யாரும் இக் கலையை கற்றுக் கொடுக்க இல்லை. முதலில்  இந்த மாணவர்களுக்கு இந்த கலையை சொல்லிக் கொடுக்கும் போது மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எல்லாவற்றையும் பயின்றார்கள். மாணவர்களின் ஆர்வத்தை பார்த்து நான் மிகவும் சந்தோசப்பட்டேன்.

பறை பற்றியும் சமூகம் பற்றியும் உங்கள் கருத்து. 
சமூகத்திலே பறையை ஒரு இழிவாகதான் பார்க்கின்ற ஒரு நோக்கு உள்ளது. கலையை போர் சார்ந்த கலை, சமயம் சார்ந்த கலை. சமூகம் சார்ந்த கலை என 3வகையாக பிரிப்பார்கள். இதில் பறை சமூகம் சார்ந்த கலையாக கூறுவார்கள். இப் பறை சாவுவீடுகளிலேயே அடிக்கப்படுகின்றது. இந்தப்பறை எப்படி இழிவானது என்பதுதான் வரலாறு. ஆனால் ஆதிவாசிகள் பாதுகாப்பிற்காகவே பறையை பயன்படுத்தினார் இவ்வாறு விலங்குகள் தம்மை தாக்க வரும் போது பறையை அடித்து தம்மை பாதுகாத்து கொண்டனர். அத்தோடுஒரு மலையில் இருந்து இன்னொரு மலையில் உள்ளவர்களை கூப்பிடுவதற்காகவும் பறையை பயன்படுத்தினார்கள். இவ்வாறு ஆரம்பகாலத்தில் பயன்பட்ட பறையை  சமூகத்தில் இன்றைய காலத்தில்  இழிவான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

முக்கியமாக சமூகத்தில் பறையடிப்பவர்கள் பறையர்கள் என்றே பார்க்கப்படுகிறார்கள். ஆனால் சாவுவீடுகளில் பறை அடிப்பவர்களை வெட்டியான் என்றே அழைப்பார்கள். பறை அடிப்பவர்கள் எல்லாம் பறையர்கள் அல்ல என்பதை முதலில் மக்கள் மனதில் கொள்ள வேண்டும்.

யாழ்ப்பாணத்;தில் கொண்டு வந்து ஆடப்பட்ட பறை ஒருமுகப்பறையாகும். இப்பறையை நெருப்பிலே சூடுபண்ணி அடிக்கின்ற ஒரு வாத்தியம் ஆகும். பறை அடிக்கின்றவர்கள் எல்லா வகையான வாத்தியங்களையும் வாசிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.

தமிழ் நாட்டில் மட்டுமன்றி யாழ்ப்பாணத்திலும் மக்கள் பறையை இழிவாக பார்க்கின்ற நிலையை நான் இங்கு வந்து பார்த்தபோது உணர்ந்து கொண்டேன்.

பறையை செய்ய பயன்படும் பொருட்கள்
பறை செய்வதற்கு வேம்பு, மாட்டுத்தோல் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக தெரு வோரங்களில் இருக்கும் வேப்பமரங்களையே பயன்படுத்துகிறார்கள். அதற்கு காரணம் யாதெனில் தெருக்களில் இருக்கினற மரங்கள் வாகன சத்தங்களை உள்வாங்கிக் கொள்ளும். ஆப்படியான மரங்களில் பறை செய்தால் அதன் சத்தம் அதிகமாக ஒலிக்கும் என்பதகால் தெருக்களில் இருக்கின்ற மரங்களை தேடி பறைக்கு பயன்படுத்துவார்கள். அதே போலத்தான் மாடுகளிலும் இளம் ஆண் மாடுகளின் தோலை எடுத்துத்தான் பறை செய்வார்கள். ஏனெனில் அதன் தோலில் உள்ள ரோமம் உரமாக இல்லாமல் இருக்கும்.

வேனுகோபாலனுடன் உரையாடும் போது பறை சம்பந்தப்பட்ட பல தகவல்களை பெற முடிந்தது.



அவருக்குள் இருக்கும் கலையை அழிந்து விடாமல் காக்க அவர் மேற்கொண்டுள்ள முயற்சிகள் அளப் பெரியன என்பதை நான் அவருடன் உரையாடும் போது அறிந்து கொள்ள முடிந்தது. இத்தகைய கலைஞர்கள் இருக்கும் வரை எமது பாரம்பரிய கலைகள் அழியாமல் எமது அடுத்த சந்ததியையும் சென்றடைந்து அவர்களும் இக்கலையை கற்றுக் கொள்வார்கள் ஆனால் 

No comments:

Post a Comment