flashvortex.

Tuesday, January 3, 2012

கோட்டையும் புனரமைப்பும்.......

யாழ்ப்பாண வரலாற்றின் சின்னமாக விளங்குகிறது யாழ் கோட்டை. யாழ் கடல் நீரேரியின் கரையில் இது அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளைக் கடந்துவிட்ட நீள் வரலாறு இதில் அடங்குகிறது.ஒல்லாந்தரால் அமைக்கப்பட்ட கோட்டை பாதுகாப்புக்கு ஏற்ற வகையில் மிகவும் பலமானதாகவும். அற்புதமானதாகவும் 1625ம் ஆண்டு போத்துக்கேயரால் கட்டப்பட்டது. 1680ல் ஒல்லாந்தரால் ஐங்கோண புதுவடிவில் கட்டப்பட்டது.


5 கொத்தளங்களைக் கொண்டதாக இருந்தது. கடல்நீர் ஏரியை அண்டி இரு கொத்தளங்களும், நிலத்தை அண்டி 2 கொத்தளங்களும் அமைந்திருந்தன. இந்தக்  கொத்தளங்கள் உயர்ந்த மதில்களால் இணைக்கப்பட்டிருந்தன.கோட்டை மதில் அடிப் பகுதியில் 40அடி அகலமானதாகவும், உச்சியில் 20 அடி அகலமாகவும் அமைக்கப்பட்டிருந்தது. மதிலின் வெளிப்பக்கமாக முருங்கைக் கற்களால் அமைக்கப்ட்ட 4 அடிக் கட்டமைப்பு இருந்தது. உட்கோட்டையைச் சுற்றி நீராழி ஓடிக்கொண்டிருக்கும். கோட்டையைச் சுற்றியிருக்கும் 132 அடி அகலமான அகழி cs;sJ.


எதிர்கால தலைமுறைக்காக வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்க நிறுவனங்களால்  Nfhl;ilia ghJfhf;Fk; Nehf;fpy; Ntiyj;jp;l;lk; eilngw;W tUfpd;wJ. 

இப் பெரு முயற்சின் ஓர் அங்கமாக, தொழிலாளர்களால் மேற்கொள்ளப்படும் யாழ் கோட்டையை சுற்றியுள்ள அகழி மற்றும் வெளிப்புற பாதுகாப்பு அரண் ஆகியவற்றை சுத்தம் செய்யும் வேலையில் படையினரும் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். இவ் வேலைத்திட்டமானது, நகர அபிவிருத்தி அதிகாரசபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியன இணைந்து மேற்கொண்டு வருகின்றன. 
யாழ் கோட்டையின் வாயில்

சுற்று மதில்
கோட்டையை சுற்றியுள்ளஅகழி
ஆரம்ப காலத்தில் தூக்குமேடை என்று 
அழைக்கப்பட்ட மணிக்கூண்டு கோபுரம்
மகாராணி தங்கியிருந்த அந்தப்புரம்
மன்னர் காலத்தில் இருந்த சுரங்கப்பாதை
கோட்டையில் உள்ள 7கிணறுகளில் ஒன்று
இடிவடைந்தநிலையில் உள்ள தேவாலயம்

இடிவடைந்தநிலையில் உள்ள இந்து கோயில்

காவலாளிகள் காவல்காக்கும்இடம்

கோட்டையை புனரமைக்கும் வேலையாட்கள்

கோட்டையை புனரமைக்கும் வேலையாட்கள்










No comments:

Post a Comment