flashvortex.

Thursday, January 26, 2012

டாக்டர் A.P.J அப்துல் கலாமை பார்க்க சென்ற போது!!!!!!!!!!!

உலகம் அறிவியல் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கும் பொது அமெரிக்கர்களையே தன்னை திரும்பி பார்க்க வைத்த மூன்றாம் உலக நாட்டின் அறிவியலாளன் அப்துல் கலாம் என்றால் மிகையாகாது.

கனவு காணுங்கள் நான் கனவு காணுகிறேன்......பறந்து கொண்டிருப்பதைப் போல பறந்து கொண்டிருக்கின்றேன் என்ற அப்துல் கலாமின் வார்த்தைகள் இன்று யாழ் மண்ணில் ஒலித்தது.........

என்னங்க புரியலையா? அப்துல் கலாம் இலங்கையிலா? அதுவும் யாழ்ப்பாணாத்திலையா ? என்று உங்களுக்கு நினைக்க தோணும்... ஆமாம் d . r அப்துல்கலாம் யாழ்ப்பணத்தில் நேற்று (23 .1 . 2012 ) யாழ் பல்கலைக் கழகத்திற்கும் யாழ் இந்துக் கல்லூரிக்கும் வருகை தந்திருந்தார். முதல் தடவையாக அப்துல்கலாமை பார்க்கப் போறோம் என்ற ஆர்ப்பாட்டம் நம் நண்பர்கூட்டத்தில்................

எனக்கு தெரிந்த அன்று எனது friend  முருகாவுக்கு phone  எடுத்து அப்துல் கலாமை பார்க்க போறம் நீயும் வா காலை 8 .30 க்கு class ல் meet பண்ணுவம் என்று நித்திரையில் இருந்த அவளுக்கு கூறினேன்......

இவ்வாறு ஆரம்பித்த எமது எதிர்பார்ப்பு நேற்று (23 /1 /2012 ) அன்று காலை 9 . 45 மணி போல புஸ் வானமாய் சதறியது.நாங்கள் செய்த தவறினால் எங்கள் media id எங்கள் கைகளுக்கு கிட்டவில்லை. இதனால் sir id இருந்த 5 பேரையும்( casrto ,jana , kamsha ,suji , mareen ) கூட்டிக்கொண்டு சென்று விட்டார். நாங்க 4 பேரும் ( kavi , suganiya , thadsa , gowsi ) sir பார்த்து 2 தடவைகள் போய் எங்களையும் கூட்டிட்டு போகச் சொல்லி கேட்டோம். ஆனால் sir மாட்டன் என்று கூறி விட்டார். பின்னர் நாம் class ல் வந்து அமர்ந்தோம். பிறகு எங்களுக்கு lecture செய்வதற்கு சபேஷ் sir  வந்தார். நாங்கள் வாங்க sir  அப்துல் கலாமை meet பண்ண போவம் என்றேன். உடனே sir ok 11  மணிக்கு அப்துல் கலாமை சந்திக்க போவம் என்றார்.

எங்கள் friends எல்லோரையும் குழுவாக பிரிச்சு விட்டார். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வேலை....ஆனால் நாங்க 5 பேரும் அப்துல் கலாமின் அசைவுகளை photo எடுத்து தருகின்றோம் என்று கூறினோம். sir எத்தனை camera வைத்திருக்கிறீர்கள் என்றார்.நாமும் இருக்கு sir என்றோம். ஆனால் இருந்ததோ 3 camera .......நாங்க எங்க friend  க்கு call எடுத்து camera  இருக்கா என்றோம். அவன் கடைசி நேரத்தில இல்ல என்று கூறினான்.. பிறகு நாங்கள் எல்லோரும் பல்கலைக் கழகத்திற்கு சென்றோம்.



வாசல் எங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. உள்ளே சென்றால் அலை அலையாக திரண்டிருந்த மாணவர்களும் அவர்களை தடுப்பதற்காக காத்திருந்த போலீசாரும் என பல்கலைக்கழகமே நிறைந்து வழிந்திருந்தது.

நாமும் கூட்டத்தோடு கூட்டமாக நின்றோம். எப்படியாவது அரங்கத்தினுள் சென்று விட வேண்டும் என்ற எண்ணமே எங்களுக்கு இருந்தது. ஆனால் எங்கள் முயற்ச்சி பலிக்க வில்லை. camera வை எடுத்துக்கொண்டு அப்துல்கலாம் வரும் entrence ல் போய் journalist உடன் போய் காத்து நின்றோம்.


வாகன தொடரணியும் வந்தது...எல்லோர் கண்களும் அகல விரிந்தன..... மாணவர்கள் எல்லோரும் அப்துல்கலாமை பார்க்க அருகே வர அங்கே இருந்த பாதுகாப்பு படையினர் அப்துல்கலாமை நெருங்க விடவில்லை. அவ்வளவு ஆர்ப்பாட்டத்தின் மத்தியில் அப்துல்காலமை photo எடுக்க எல்லோர் கரங்களும் மேலே எழுந்தன. அதில் எங்கள் கைகளும் ஒன்று...........



பிரபலம் ஒருவரை சந்திப்பது என்றால் ஒரு journalist எவ்வளவு கஷ்டப்படுவான் என்பதை இன்று தான் உணர்ந்து கொண்டேன்.......


சிரமத்தின் மத்தியில் நாங்கள் எடுத்த photo வில் 2 . 3 photo க்களிலே தான் அப்துல் கலாமின் பிரதி விம்பம்...........

entrence ல் இருந்து பின் பக்கத்தில் இருக்கும் வழியால் நானும் கவியும் ஓடிச் சென்று அரங்க நுழைவாயிலில் காத்து நின்றோம். அப்துல்கலாமும் வந்தார்.. பாதுகாப்பு படையினரின் சுற்றி வளைப்புடன்......


அவரை வரவேற்பதற்காக கும்பம் வைத்து விளக்கு கொளுத்தி வைக்கப்பட்டு இருந்தது.நாங்கள் இருவரும் அந்த மேசைக்கு முன்னால் போய் நின்றோம். எங்களுக்கும் முன்னால் இருந்த journalist உம் police  உம் நெருக்கமாக வர வர நாங்களும் பின்புறமாக சென்றோம். 


விளக்கில் இருந்த நெருப்பு என் கையை பதம் பார்த்தது மட்டுமின்றி கவியின் ஆடையையும் பதம் பார்த்தது. எங்களுக்கு பின்னால் இருந்தவர் எங்கள் இருவரையும் முன்னாடி போகுமாறு கூறினார்.  அப்புறம் கலாமும் அரங்கத்துக்குள் சென்றுவிட நாமும் அதன் பின் வந்து தான் கையை பார்த்தோம். தீக் காயத்தினால் கைகள் பொங்கிப் போய் இருந்தன. சிறிது நேரம் காத்திருந்து விட்டு நாங்கள் எடுத்த போட்டோவை பார்த்து விட்டு போய் 1st bench ல் இருந்தோம்.....



function ன் முடிந்ததும் தொடரணியும் வந்தது. அப்துல் கலாமும் வந்தார். நாமும் வழியனுப்பி வைத்தோம்......

அத்துடன் நின்று விடவில்லை அப்துல்கலாமின் பயணமும் அவரை தொடர்ந்த எம் பயணமும்............

பிறகு பல மணி நேர திட்டலின் பின்னர் ஒரு முடிவுக்கு வந்தோம்....நாம் 4 பேரும் எப்பிடியாவது நாம் அப்துல் கலாமை சந்தித்து விட்டு தான் வீடு செல்வது என்று.......

அதன்படி அப்துல்கலாமை பின் தொடர்ந்து யாழ் / இந்துக் கல்லூரிக்கு சென்றோம். அங்கு எமக்கு அப்துல் கலாமை சந்திக்க எவ்வித தடையும் இல்லை. காரணம் எமது அறிமுகம் ஊடக மாணவர்கள் என்பதே......அங்கும் அப்துல் கலாமுக்காக கத்து நின்றோம்.......

அப்துல்கலாம் வரும் வேளை நெருங்கியது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கமாக காத்திருந்தோம் .நேரம் போனது அப்துல் கலாமும் வந்தார். எல்லோருடைய camera க்களும் அவரை படம் பிடிக்க எமது camera க்களும் படம் பிடிக்க தவறவில்லை.வந்திறங்கியவுடன் வெளியில் நின்ற சிறுவர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். அவரும் அவர்களுடன் உரையாடிவிட்டு சென்றார்.


 இந்துக் கல்லூரிக்கு வந்த அப்துல் கலாம் நினைவுக் கல்  ஒன்றை திரை நீக்கம் செய்து வைத்ததுடன் இந்துக் கல்லூரி கேட்போர் கூடத்துக்கு சென்றார்.


பல்வேறு பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் பின் கேட்போர் கூடத்துக்கு சென்றோம். அவருடைய உரையை கேட்டுக்கொண்டு photo வும் எடுக்க தவறவில்லை.

கலாமின் பேச்சு அவரைப் போல இயல்பாகவும் மாணவர்கள் விரும்பும் வகையிலும் அமைந்திருந்தது. மாணவர்கள் கேள்வி கேட்டனர்.....கலாமிடம் குறிப்பாக தரம் 6 மாணவன் உங்களை போல வர என்ன செய்ய வேண்டும் என்று கேட்டமை அனைவரது பாரட்டையும் பெற்றது.

அப்துல் கலாமை சந்தித்த பிறகு தான் எங்களுக்கு sir meeting வைப்பது நினைவுக்கு வந்தது..... எல்லோரும் ok sir வந்திருப்பர் வாங்க போவம்  என்றோம்.. meeting 3 மணிக்கு நாங்க போனதோ 5 மணிக்கு.... class உம் வந்தோம். meeting உம் தொடங்கி இருந்தது. sir கேட்டார் அப்துல் கலாமை பாத்திடின்களா  என்றார்.  நாங்களும் ஆமாம் என்றோம். பிறகு நடந்த எல்லாவற்றையும் சொன்னோம். sir அதுக்கு முயற்ச்சி திருவினை ஆக்கும் என்றார்........



No comments:

Post a Comment