flashvortex.

Friday, January 13, 2012

வாழ்க்கையில் வசந்தத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் மக்கள்!

அரியாலை வசந்த புரம் மக்கள் பலவருட இடப்பெயர்வின் பின்னர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போதும் இதுவரை அவர்களுக்கான அடிப்படை வசதிகள் எவையும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.

1990களில் உள்நாட்டு யுத்தம் காரணமாக தமது இருப்பிடங்களைவிட்டு புலம் பெயர்ந்து சென்ற மக்கள் இந்தியாவிலும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தஞ்சமடைந்திருந்தனர்.  20 வருடங்களின் பின்னர் மீண்டும் தமது சொந்த இடங்களில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வசந்தபுர மக்கள் குடியேறியுள்ளனர்.


அவர்களை சந்தித்த போது 1990களில் இந்த இடத்தில் 350 குடும்பங்கள் வரையில் இருந்துள்ளனர். யுத்தம் ஏற்படுத்திய தொடர் இடப்பெயர்வுகள் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் நாடு கடந்தும் குடியேறிய மக்கள் கால மாற்றத்தால் அங்கேயே நிரந்தர வாசியாகவும் மாறிவிட்டனர். தற்போது சுமார் 38 குடும்பங்களைச்சேர்ந்த மக்களே வசிக்கின்றனர் என்று அங்கு வசிக்கும் மதிவதனி தெரிவித்தார்.

நாம் சொந்த இடத்திற்கு வந்துள்ள போதும் எந்த வித அடிப்படை வசதிகளும் இன்னும் செய்து கொடுக்கப்படவில்லை என்றார் வசந்தி சச்சிதானந்தம்.1990ம் ஆண்டில் எமது சொந்த இடத்தைவிட்டு வெளியேறி இப்பொழுதே திரும்பி வந்துள்ளோம்.

இங்கு அதிகளவான பெண்பிள்ளைகள் வசிக்கிறார்கள் ஆனால் பென்பிள்ளைகள் வாழ்வதற்கான சூழல் இங்கு இல்லை இதனால் பல குடும்ப பெண் பிள்ளைகள் அப்பம்மா வீட்டிலும் சொந்தகாரர் வீடுகளிலும் வசிக்கின்றனர்.

பொதுக் கிணறுகளில் பெண்கள் குளிக்கமுடியாது. இவ்வாறான சூழலில் எப்படி வாழமுடியும். நாங்கள் மிகவும் வறிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என் கணவர் கடற்தொழில் செய்தே எங்களை காப்பாற்றுகின்றார். தினவும் சாப்பாட்டிற்கே கஸ்ரப்படும் நாங்கள் எப்படி இவ் வசதிகளை செய்ய முடியும்.

எனக்கு மூன்று பிள்ளைகள் அவர்களை படிக்க வைக்கவே நான் மிகவும் கஸ்ரப்படுகின்றேன். பாடசாலைக் கல்வியுடன் மட்டுமே என் பிள்ளைகள் படிக்கின்றனர். நாங்கள் தான் படிக்கவில்லை என் பிள்ளைகளை படிக்க வைக்க எனக்கும் விருப்பம் அவர்களை வகுப்புக்களுக்கு அனுப்ப விருப்பம் ஆனால் எங்கள் சாப்பாட்டிற்கே கஷஸ்ரப்படும் பொது எப்படி அவர்களை படிப்பிற்க முடியும். என வருத்தத்ததுடன் கூறினார்.

கிழமைக்கு 3 நாட்களே கடலில் தொழில் செய்ய அனுமதி உள்ளது. 3 நாளில் கிடைக்கும் வருமானம் எவ்வாறு ஒரு கிழமைக்கு காணும். மிகவும் கஸ்ரத்துடனேயே எமது வாழ்கை போய் கொண்டு உள்ளது எனத் தெரிவித்தார்.

பெயரில் இருக்கும் வசந்தம் எப்போது எமது வாழ்க்கையில் கிடைக்கும் என்ற ஏக்கத்துடனேயே காத்துக் கொண்டு இருக்கின்றார் வசந்தி சச்சிதானந்தம்.

No comments:

Post a Comment