flashvortex.

Tuesday, January 31, 2012

'குருதிக்கொடை மூலம் உயிர்காப்போம் வாருங்கள்' இரத்தவங்கி அறிவிப்பு

யாழ் போதனா வைத்திய சாலையில் அனைத்துவகை குருதிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.

'குருதி பற்றாக்குறை பாரிய பிரச்சனையாக காணப்படுகின்றது. எல்லா வகை குருதியும் தேவைப்படுகின்றது. குருதிக் கொடையாளர் வருகின்றார்கள். ஆயினும் இன்னும் குருதி கொடையாளர் முன்வந்து குருதி வழங்க வேண்டும்.' என வைத்தியர் திருமதி தாரணி குருபரன் தெரிவித்தார்.


அத்துடன் ' இரத்த தானத்தின் போது 450ml அளவான குருதியே வழங்கப்படுகின்றன. 18 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்ட 50kg  எடையுள்ளவர்கள் குருதி வழங்க முடியும்' எனவும் கூறினார். 

குருதி மாற்றீடு தேவைப் படும் சந்தர்பங்கள் 

     அதிக குருதி இழப்பு (வீதி விபத்துக்கள், சத்திர சிகிச்சை, மகப் பேறு)
      குருதிச் சோகை
      தலசிமியா
      டெங்கு
     குருதி உறைய நோய்
     தீவிர எரிகாயங்கள்
     புற்று நோய்

குருதி வழங்குபவர் கொண்டிருக்க வேண்டிய தகமைகள் 
வயது 18 -60
 உடல் நிறை >- 50kg
ஆரோக்கியமானவர்
 குருதி மூலம் பரவும் நோய்களுக்கு ஆளாகாதவர்( ஈரல் அழற்சி, எயிட்ச்)


குருதி வழங்கிய பின் 

விசேட உணவு தேவை இல்லை

குருதி வழங்குபவரினதும் குருதி பெருபவரதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்      

நான்கு மாதங்களின் பின் மீண்டும் இரத்ததானம் செய்யலாம்

ஒழுங்கான தொடர்ச்சியான தவணை முறையில் குருதி தானம் செய்யப்படுவதனால் ஏற்படும் நன்மைகள்   

குருதி வழங்கிய பின்னர் நுண் குருதிச் சுற்றோட்டத்தில் ஏற்படும் வினைத்திறனால் உடலில் புத்துணர்ச்சி ஏற்படுகின்றது.

மருத்துவ ரீதியான உடற்பரிசோதனையும்     குருதி மாதிரியில்   செய்யப்படும் இரத்தப் பரிசோதனைகளும் உடல் நலம் தொடர்பான நிலையை இலவசமாக அறிய உதவுகின்றன.

குருதிக் கூறுகள் உற்பத்தி செய்யும் என்புமச்சைகளின் தொழிற்பாடு புத்துயிர்ப்பு அடைகின்றன.

கொலஸ்திரோல்  அதிகரித்து ஏற்ப்படும் மாரடைப்பிற்கான சாத்தியங்கள் ஒப்பீட்டு அளவில் குறைவாக உள்ளதாக ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.





No comments:

Post a Comment