flashvortex.

Saturday, October 29, 2011

சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி

முசோலினி எமிலியா-ரொமக்னா என்னும் ஊரிலுள்ள போர்லி மாகாணத்தினலுள்ள டோவியா டைபிரிடாப்பி என்னும் நகரத்தில் ஓர் உழைக்கும் பாட்டாளியின் குடும்பத்தில் பிறந்தார். இவர் பெற்றோருக்கு இவரே மூத்தவர் இவரின் உடன் பிறந்தோர் அமோல்டோ  முசோலினி   மற்றும் எட்விக் முசோலினி. இவர் தந்தை பெயர் அலக்சாண்ட்ரோ முசோலினி. இவர் ஒரு இரும்பு அடிக்கும் கொல்லர். இவர் தாய் ரோசா முசோலினி ஆசிரியை. இவர் தாய் கத்தோலிக்க மதத்தில் அதிக இறை பற்றுடையவர்.

கல்வி

முசோலினி சிறு வயதில் தன் தந்தையின் தொழிலுக்கு மிகவும் உதவி புரிந்தார். தந்தையாரின் சீர்திருத்தக் கொள்கையினால் அவருக்கு ஞானஸ்நானம் செய்யப்படவில்லை. தன் தந்தையின் பொதுவுடமை,  சீர்திருத்த கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அதன் காரணமாக மெக்சிக்கன் சீர்திருத்தவாதியான பெனிட்டோ ஜீவாராசின்  பெயரை தன் பெயரோடு சேர்த்து பெனிட்டோ முசோலினி என்று மாற்றி கொண்டார். பிறகு விடுதிப்பள்ளி ஒன்றில் சேர்க்கப்பட்டார் அப்பள்ளியில் இவர் செய்த குறும்புகளின் காரணமாக பள்ளியைவிட்டு நீக்கப்பட்டு வேறு பள்ளியில் சேர்க்கப்பட்டார், அங்கு சிறப்பானதொரு கல்வி பயின்றார். 1901 ஆம் ஆண்டு பள்ளி இறுதி தேர்வுக்குப்பின் தொடக்க கல்வி ஆசிரியராக அப்பள்ளியிலேயே நியமிக்கப்பட்டார்.


இராணுவத்தில் பணிபுரிதல்

 

1902ம் ஆண்டு முசோலினி தன் சொந்த மண்ணை விட்டு சுவிட்சர்லாந்துக்கு  குடியேறினார்.அங்கு வேலை கிடைக்காமல் குடும்ப வறுமைக்கு தள்ளபட்டார். அதன் சோசலிச இயக்கத்தில் சேர்ந்தனினால் இத்தாலிக்கு நாடு கடத்தப்பட்டு அங்கு தன்னிச்சையாக இராணுவத்தில் சேர்ந்து பணி புரிந்தார். அவருடைய இராணுவப்பணியில் குறைகள் குற்றங்கள் ஏதுமின்றி சிறப்பான பணி புரிந்தார். இத்தகவல்கள் அவருடைய இராணுவத்தொழில் குறிப்பேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1917 வரை இராணுவத்தில் சிறப்பானதொரு பணிபுரிந்தமையால் 40 க்கும் அதிகமான பதக்கங்கள் அவர் உடையை அலங்கரித்தன. அதன்பின் டைபாய்டு விஷக்காய்ச்சலின் காரணமாகவும் மார்ட்டர் வெடிவிபத்தில் சிக்கி விபத்துக்கள்ளானதல் அப்பணியை தொடரமுடியாமல் போனது.

 முதலாம் உலகப்போரில் நேச நாட்டு சோசலிசம் படைபிரிவுக்காக பணிபுரிந்து திரும்பியவுடன் தன் சோசலிச கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சோசலிசம் தோற்றுப்போன ஓன்று. ஆகையால் தன்னை கொடுரகுணம் கொண்ட மனிதனாக மாற்றிக்கொண்டார். இப்படியிருந்தால் மட்டுமே இத்தாலியை அதன் பழையநிலைக்கு நிமிர்த்தமுடியும் என நம்பினார். இறந்துபோன ஓன்று; அவற்றால் நாட்டுக்கு பயன் இல்லை என்பதை அறிவித்தார். 


அரசியலின் மூன்றாம் வழி

 

முசோலினியின் பாசிசக் கொள்கையில் அதிக பற்று கொண்ட முசோலினியின் நம்பிக்கைக்குரிய டினோ கிராண்டி என்பவர் இராணுவத்தில் ஒய்வு பெற்றவர்களிடம் பரப்புரை செய்து அவர்களை ஒன்று திரட்டி கருஞ்சேனை (Black Shirts) என்ற தனி இராணுவப்பிரிவை உருவாக்கினார். இந்த கருஞ்சேனைப் படையினர் கம்யூனிசவாதிகளையும், பொதுவுடமை வாதிகளையும் மற்றும் குழப்பவாதிகளையும் அடக்கும் பணியினை மேற்கொண்டது. இது அரசியலின் மூன்றாம் வழியாக (The Third Way) கையாளப்பட்டது. கம்யூனிசத்தை அப்போதய அரசு வெறுத்ததினால் இவற்றின் வளர்ச்சியையும், செயல்பாடுகளையும் அப்போதைய அரசு கண்டுகொள்ளவில்லை. இதன் காரணமாக பாசிஸ்டுகளின் எண்ணிக்கை இரண்டு வருடங்களில் கணிசமான எண்ணிக்கையை எட்டியது. பின் தேசிய பாசிசக் கட்சியாக  (National Fascist Party) ரோமில்  உருவெடுத்தது. 1921 தேர்தலில் முசோலினி முதன் முறையாக இத்தாலி கீழ் சபை பாரளுமன்றக்குழு தலைவராகத் (Chamber of Deputies) தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்கொள்கையால் முசோலினி1911 முதல்1938 வரை யூதர்களின் கணிசமான எதிர்ப்பையும் பெற்றுக்கொண்டார்.


இட்லரும் முசோலினியும்

 

முசோலினியும் இட்லரும் ஆரம்பத்தில் எதிரிகளாகத்தான் இருந்தனர். 1933 இல் முசோலினின் நண்பர் எய்ஞ்பெட்டால்பஸ் நாசிக்களால் கொல்லப்பட்டனர். அது முதல் முசோலினி இட்லரை எதிரியாகத்தான் பாவித்தார். முசோலினியின் பாசிசக் கட்சியில் யூதர்கள்  யூதரல்லாதவர் யூதபகைமை  என்ற கோட்பாடுகள் கடைப்பிடிக்கப்படவில்லை. பாசிசக்கொள்கையை மட்டுமே வலியுறுத்தினார். ஆகையால் முசோலினிக்கு இட்லரின் கொள்கை பிடிக்கவில்லை. முசோலினி போப்பிடம் பற்றுகொண்டவர். அது மட்டுமில்லாமல் கலாச்சார பண்புகளையும் செயல்களையும் வைத்து ஒருவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வர்க்கபேதத்தை உருவாக்கலாம். ஆனால் பிறப்பினால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதம் எடுபடாது என்ற நம்பிக்கையுடையவர் என்பதால் இட்லரின் நாசிசத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.1920 முதல் 1934  வரை உள்ள கால ஒட்டத்தில் யூதர்கள் சமூகத்தின் எல்லா மட்டங்களில் இருந்ததால் இத்தாலிய பாசிசம் யூதர்களுக்கு எதிரான வர்க்கபேதத்தையும் வகுப்புவாதத்தையும் வளர்க்கவில்லை. அவர்கள் ஒரு சிறு கூட்டமாக இருந்ததால் ரோம் அரசர் காலத்திலிருந்து அவர்களால் எந்த தொல்லையும் ஏற்படவில்லை.

1938ல் இட்லரின் தாக்கம் இத்தாலியில் அதிகமிருந்த நேரத்தில் இன வேறுபாட்டுணர்வு அறிக்கையை முசோலினி தயாரித்து வெளியிட்டார் அந்த அறிக்கை முழுக்க முழுக்க இட்லரின் கொள்கையை பறை சாற்றியது. அதில் எந்தநேரத்திலும் எந்தபதவியிலிருந்தும் குடியுரிமையிலிருந்தும் யூதர்களை விலக்க உரிமையுண்டு என்பதை அறிவித்தது. இந்த அறிக்கை இத்தாலிய பெரும்பான்மை பாசிசவாதிகளின் ஆதரவை பெறவில்லை மாறாக முசோலினிக்கு எதிர்ப்பை வளர்த்தது. ரோம ஆலயத்தின் போதகர் பதினேழாம் போப் பயஸ்  இந்த அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதினார்.




முசோலினியை கொல்ல முயற்சி

 
முசோலினியின் பரப்புரைகள் அவ்வப்போது எதிர்ப்புகளை காட்டத்தயங்காது பெரும்பாலும் சிறிய எதிர்ப்புகளை அவரே ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார். 7 ஏப்ரல், 1926  வையலட் ஜிப்சன் துப்பாக்கியால் சுட்டதில் அவர் மூக்கில் காயம் ஏற்பட்டது. பின் 31 அக்டோபர்,1926  ஐரிஷ் பெண்ணும் அவர் மகளும் சுட்டதில் தப்பித்துகொண்டார், 15 வயதுடைய ஆன்டியோ ஜாம்போனி சுடமுற்பட்டபோது பிடிபட்டு அங்கேயே மரண தண்டனை  கொடுக்கப்பட்டது. ரோமிலும் அவரை கொல்ல இரு கலகக்காரர்கள் முயன்றனர். முயற்சி முறியடிக்கப்பட்டு இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். 1938 ல் சிலோவேனிய  பாசிசபகைமைவாதி கோபரிட் முயற்சித்தான் அவன் முயற்சி தோல்வியுற்றது.
 
வாழ்க்கைக் குறிப்பு
 

 

முசோலினியின் முதல் மனைவி பெயர் இடா டாலசர், [[1914] ம் ஆண்டு டிரன்டோவில் திருமணம் புரிந்தார் இவர்களுக்கு பெனிட்டோ அல்பினோ  என்ற மகன் உள்ளார், ஓராண்டு கழித்து முசோலினி ராச்சிலி குடி என்பவரை 1915ல் மணந்தார். 1910  ஆண்டே இவருக்கு திருமணம் நடந்துவிட்டதாகவும் தன் அரசியல் கவுரவத்திற்காக இருவரிடமும் மறைத்துவிட்டார். முதல் மனைவியும் மகனும் பின்னாளில் அதிக தொல்லைகொடுத்தனர். ரேச்சலுக்கு இரு மகள்கள் எட்டா (1910-1995) அன்னா மரியா (3 செப்டம்பர் 1929- 25 ஏப்ரல் 1968), அதற்குபின் ரவேன்னாவை 11 ஜூன் 1960, நன்டோ புசி நெக்ரில் திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு விட்டோரியோ (1916-1997). புருனோ (அக்டோபர் 1918-7 ஆகஸ்டு 1947). ரோமேனோ (1927-2006) என மூன்று மகள்கள் பிறந்த்னர். முசோலினிக்கு பல தாரங்கள் உண்டு. மார்கெரிடா சபாட்டி கடைசியாக கிளாரா பெட்டாசி இன்னும் பல பெண்களுடன் லீலா விநோதங்கள் புரிந்துள்ளதாகவும் அதனால் பெண்களின் சூழல் அதிகம் இருந்ததாக அவருடைய சுயசரிதையாளர் நிக்கோலஸ் பேரல் குறிப்பிடுகிறார்.

முசோலியின் மரணம்


அவர் மனைவி கிளாரா பெட்டாசியின் உடல்களும் மிலனில் உள்ள பியஜேல் லொரெட்டோவிற்கு எடுத்துசெல்லப்பட்டு தலைகீழாக எரிவாயு நிரப்பும் நிலையத்தின் கூரையிலுள்ள இறைச்சியை தொங்கவிடும் கொக்கியில் மாட்டித் தொங்கவிட்டனர். இந்த செயல்களின் நோக்கம் பாசிசவாதிகளை அச்சுறுத்துவதற்காகவும், இதற்குமுன் பார்ட்டிசான்களை இக்கொடுரமான முறையிலேயே முசோலினியும் அச்சு நாட்டு அதிகாரிகளும் செய்ததற்கு பழிவாங்கும் நோக்கில் தொங்கவிடப்பட்டது, அதன் கீழேயிருந்து அங்குவாழ் மக்கள் அவர்களின் உடல்கள் மீது கற்களைக்கொண்டு அடித்து தங்கள் ஆத்திரத்தை தீர்த்துகோண்டனர். பலரும் வசைவு மொழிகொண்டு பதவியிழந்த தலைவரின் அட்டூழியங்களை கேலியும் கிண்டலுமாக பேசினர். முசோலினியின் விசுவாசியும் தீவிர பாசிசவாதியுமான அக்கிலி ஸ்டாரேஸ் தன்னைத்தானே ஒப்படைத்து பின் மரணதண்டனை விதிக்கபட்டு முசோலினியின் உடல் தொங்கவிடப்பட்டிருக்கும் இடத்திற்கு அழைத்துச்சென்று காட்டினர் உன்னைவிட யார் இது மாதிரி செய்யமுடியும் முசோலினி நீ ஒரு கடவுள் என்று கூறி வீரவணக்கம் வைத்து என் தலைவனுக்காக நான் என்ன கொடுக்கமுடியும்  அக்கிலி ஸ்டாரேஸ் தலையில் குண்டுகள் பாய்ந்தன தன் தலைவனின் பக்கத்தில் அந்த விசுவாசியும் சரிந்து விழுந்தார்.

முசோலினி கையாண்ட யுத்த உத்திகள்

பிய தேசாபிமானிகளுக்கு வீர உணர்வூட்டி இத்தாலிய வல்லரசுக்கு எதிராகத் தமது நாட்டு மண்ணைக் காப்பதற்கு மிக மும்முரமாகப் போரை முன்னெடுத்துச் சென்ற பாலைவனச் சிங்கம்தான் உமர் முக்தார்.
பாசிஸ்ட் தலைவன் பெனிட்டோ முசோலினி சனூஸிப் படையை தகர்ப்பதற்கு புதிய உத்திகளுடன் ஆர்த்தெழுந்தான்.
1929 ஜூன் மாதம் பற்பல புதுப்புது இராணுவ- யுத்த உத்திகளை முசோலினி கையாளத் தொடங்கினான்.
லிபியாவின் ஜெபல் (Ghebel) கடலோரக் கிராமத்தில் வாழ்ந்த சுமார் ஓரிலட்சம் மக்களை இடம்பெயரச் செய்தான். கியாறபப் (Giarabub) என்ற லிபிய- எகிப்திய கடலோர எல்லையை மூடினான். இதனால் வெளிநாடுகளிலிருந்து வந்த எவ்வித உதவியையும் சனூஸிப் படையினர் பெற முடியாதவாறு செய்தான்.
படைப்பலம் ஆயுத பலம்- பண பலம்- ஆதிக்க பலம் இவையனைத்தையும் ஒட்டுமொத்தமாகத் திரட்டிக் கொண்டு வீர லிபியப் படையை மடக்கி- அடக்கி- ஒடுக்குவதற்கு சகலவித உத்திகளையும் முசோலினி கையாண்டான். இப்போராட்டத்துக்கு வலுவூட்ட வான்படையையும் இறுதியாக ஏவிவிட்டான்.
அதுமட்டுமா, உள்ளூர் எட்டப்பர்களும் முசோலினிக்கு உளவு பார்த்தனர்.


No comments:

Post a Comment