Tuesday, May 29, 2012
ஏக்கங்களுடன் வாழும் தும்பளை கிழக்கு மக்கள்.
பிரச்சனைகள் எல்லோர்க்கும் வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே இருக்கும். இதற்கு மாறாக பிரச்சனைகயையே வாழ்க்கையாக கொண்டு வாழ்கின்றனர் தும்பளை கிழக்கு மக்கள்.
பருத்தித்துறையில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திலிருந்து அமைந்திருக்கின்றது தும்பளை கிழக்கு கிராமம். இங்கு 389 குடும்பங்கள் வாழ்வாதார வசதிகள் இன்றி வசித்து வருகின்;றமை கவலைக்குரிய விடயமாகும். இக் கிராமம் அதிகமான பிரச்சனைகளை எதிர்நோக்கிய வண்ணம் உள்ளன. இக் கிராமமானது 2004ம் ஆண்டு சுனாமியின் போது பாதிக்கப்பட்டது. இது ஒரு கரையோர குடியிருப்பாகும்.
இல்லாத ஒன்றிற்கு எதற்காக தினம்??
நூறாயிரம் போர்வீரர்களின் துப்பாக்கி முனையில் செருகப்பட்டிருக்கும் கூர்மையான கத்தியைவிட செய்தித்தாள்களைக் கண்டு நான் பயப்படுகின்றேன்' என்றார் நெப்போலியன்.
இவர் கூறிய வார்த்தைகளுக்கு மாறாக இன்று ஊடகவியலாளர்களைப் பார்த்து பயப்படும் காலம் போய் ஊடகவியலாளர்கள் இந்த உலகத்தில் பயந்தே வாழவேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றனர்.
இன்றைய காலகட்டத்தல் ஒரு ஊடகவியலாளன் தனது கருத்துக்களை சுதந்திரமாக வைக்கமுடியாத சூழலே நிலவுகின்றது.அரசாங்கத்திற்க்கு எதிராக ஒரு கருத்தை முன்வைக்கும் போதே ஊடகவியலாளர்கள் மீது எல்லோர் மீதும் பார்வை திரும்புகின்றது.அடுத்த கணம் அந்த ஊடகவியலாளன் 'கடத்தப்பட்டார் அல்லது தாக்கப்பட்டார்' என்ற செய்தி வெளிவரும்.
இப்படியே குறைந்தால் இறுதிக்கிரியை என்னவாகும்?
சிறுவர்களின் எண்ணங்களை வெளிக் கொண்டுவந்த 'எனது உலகு' கண்காட்சி
Saturday, May 19, 2012
வாக்குவாதம் வாழ்க்கைக்கு ஆகாது!
காதல் திருமணம் செய்யுங்கள்! நிறைய நன்மையிருக்கு!!
காதலின் சின்னங்களாக கல்லறைகள் வேண்டாம். வாழும் வீடுகளே இருக்கட்டும்.
நம்மைப் பற்றி நமக்கு......
Sunday, May 6, 2012
சமூகத்தினால் தன்னிலை இழந்த தப்பாட்டம்
காலத்தின் மாற்றத்திற்கேற்ப இந்த உலகமும் மாறிக் கொண்டு வருகின்றது. பழமையை மறந்து புதுமையை நாடுகின்றனர் மக்கள். இதனால் 'பழையன களைதலும் புதியன புகுதலும்' என்ற முதுமொழி தற்போது வலுப் பெற்று வருகின்றது. பெரியோர்கள் எதற்கு சொன்னார்களோ தெரியாது ஆனால் தற்கால நடைமுறைக்கு இது சாத்தியம் ஆகியுள்ளது. இதற்க்கு பறை சிறந்த எடுத்துக்காட்டு.பறை தமிழர்களின் பாரம்பரிய கலை ஆகும். இப் பாரம்பரிய கலை இன்று சமூகத்தினால் ஒடுக்கப்பட்டு எல்லோராலும் தாழ்த்திப் பார்க்கப்பட்டு வருகின்றது. இப் பறையை தப்பாட்டம் என்று அழைப்பர்.
கருத்து சுகந்திரம்
ஒருவர் தான் விரும்பிய கருத்தை வெளியிடவும் பகிர்ந்து கொள்ளவும் ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் உரிமை உள்ளது. உரிமைகளும் சுகந்திரங்களும் என உலக நாடுகளில் மத்தியில் கூறிக் கொள்ளும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு நாட்டில் மக்களின் வாய்கள் கட்டப்பட்டுள்ளது யாருக்கு தெரியும்?
யுத்தம் முடிவடைந்த பின்னர் ஜனநாயகம் நிலைத்து விட்டது. மக்களுக்கு பூரண சுகந்திரம் இருக்கின்றது எனக் கூறப்படுகின்றது. ஆனால் மக்கள் சுகந்திரமாக தமது கருத்துக்களை கூற முடியாத நிலையே காணப்படுகின்றது. தற்போதைய சூழ்நிலையில் யாழ்ப்பாணத்து மக்கள் அரசியல் அரசாங்கத்துக்கு எதிராக தமது கருத்துக்களை கூற மறுக்கின்றனர்.
Subscribe to:
Posts (Atom)