
இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் நியூகினியில் முகாமிட்டிருந்த படை வீரர்களுக்கு இந்த பறவை பற்றிய எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தமையானது இதனது தாக்குதலின் பாரதூரத்தை தெளிவாக்குகிறது.
இந்த நெருப்புக்கோழிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியின் மழைக்காடுகளில் பெரும்பாலும் வாழுகின்றன. உண்மையில் பார்ப்பதற்கு மிக அழகான இவைகள் பயங்கர ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடியதுமாகும். மிருகக்காட்சி சாலைகளில் வைத்து பராமரிக்க மிகக் கடினமான ஒரு உயிரினமாக இவை உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment