flashvortex.

Thursday, November 3, 2011

சூரியனுடன் மோதி அழிந்துபோகும் வால் நட்சத்திரம்:


அண்டவெளியிலும் மற்றும் நமது பால்வெளியிலும் பல நூற்றுக்கணக்கான வால் நட்சத்திரங்கள் வலம்வந்துகொண்டு இருக்கின்றன. அவை உண்மையாகவே ஒரு விண்கல்லாகவே நோக்கப்படுகிறது. அவை பயணிக்கும் வேகத்தால் அக் கற்களில் இருந்து தூசித்துகள்கள் கிளம்பி பின்நோக்கிச் செல்வதால் அக் கல்லுக்கு ஒரு வால் இருப்பதுபோலத் தோற்றமளிக்கிறது என்று விஞ்ஞானிகள் விளக்கஞ்சொல்லுகின்றனர்.



இதுபோல ஒரு வால் நட்சத்திரம் சமீபத்தில் சூரியனோடு மோதி அழிந்துள்ளது. இவ்வாறு நடக்கும் காட்சிகள் அபூர்வம் அதனை மனிதனின் கண்களால் பார்க்கவும் முடிவதில்லை. ஆனால் செயற்கைக்கோள்களின் துல்லிய கமராக்களின் கண்களில் இருந்து இவை தப்பிவிடுமா என்ன ? 


அமெரிக்காவால் விண்வெளியில் ஏவப்பட்டுள்ள SDO என்னும் விண்கலம் உயர் வரையறை படங்களை பூமிக்கு அனுப்பிவருகிறது. அவ்வாறு அனுப்பப்பட்ட படங்களில், கடந்த ஜூலைமாதம் 6ம் திகதி ஒரு வால் நட்சத்திரம் சூரியனுடன் மோதி தனது மரணத்தை சந்தித்ததை அது துல்லியமாக படும் எடுத்து அனுப்பியுள்ளது. சுரியனுடன் மோதமுன்னர் 15 நிமிடங்களுக்கு முன்னரே அது தீ பற்றி எரிந்து அழிந்துபோனதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

No comments:

Post a Comment