flashvortex.

Friday, November 25, 2011

பிரான்சின் முன்னால் முதற்பெண்மணி மரணம்.

பிரான்சின் காலஞ்சென்ற முன்னால் ஜனாதிபதியான  François Mitterrand இன் மனைவி Danielle Mitterand திங்கள் இரவு காலமாகியுள்ளார். இவருக்கு வயது 87. பரிசின் Hôpital Georges-Pompidou இல் வெள்ளிக்கிழைம  அனுமதிக்கப்பட்ட இவர் ஞாயிற்றுக்கிழமை செயற்கை மயக்க நிலையில் (coma artificiel) வைக்கப்பட்டிருந்தார்.
இவரின் சமூக நல சேவைகளினால் இவர் மிகவும் பிரபலமடைந்திருந்தார். ஜனாதிபதியின் துணைவியார் என்பதால் மட்டுமல்ல இவரது பொது நலத் தொண்டுகளாலும் இவர் முதற்பெண்மணியாகவே திகழ்ந்தார் என அரசியற் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


இவர் 1986ம் ஆண்டில் «France libertés» எனும் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். இதன் மூலம் உலகின் பல நாடுகளில் வறுமையிலிருந்த மக்களுக்கான சத்துணவு மற்றும் சுகாதாரத் தேவைகளை நிறைவற்றினார். உலகின் பிணக்குகள் உள்ள நாடுகளில் தன்னால் இயன்ற அமைதிப் பணிகளையும் மேற்கொண்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  «un monde plus juste» எனும் கொள்கையை இவரது தொண்டு நிறுவனம் தாரகமந்திரமாகக் கொண்டு இயங்கியது.

No comments:

Post a Comment