flashvortex.

Wednesday, July 24, 2013

துயர் படிந்த கதைகள். அதிகரிக்கும் தற்கொலைச் சாவுகள்…….?????? கதை – 04

எந்தவொரு மனிதனும் வாழ்வில் சந்தோசமாகவும் எல்லோரும் மதிக்கத்தக்கவகையிலும் வாழ வேண்டும் என்று எண்ணுகின்றான். அதற்கு பணமும் வழிவகுக்கின்றது. வாழ்வில் எல்லோரும் தங்களை மதிக்க வேண்டும் என எண்ணும் மனிதர்கள் பொருளாதார ரீதியிலும் உயரவேண்டும் என்று நினைக்கின்றனர்.  இதனால் என்ன கஸ்ரப்பட்டாவது தாம் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று தம்மிடம் இருக்கும் சொத்தினை வட்டிக்கு அடகு வைத்து தமது மகனை வெளிநாட்டிற்கு அனுப்புகின்றனர்.



ஆனால் அந்த நிமிடத்தில் இருந்து  பொருளாதார ரீதியான  கடன் அவர்களுக்கு பூதாகரமாக மாறுகின்றது. அன்றாட வாழ்க்கைச் செலவிற்கே குறிப்பிட்ட ஒரு தொகை மக்கள் உழைக்கின்றனர். அவர்கள் சம்பாதிக்கும் பணம் அவர்களின் செலவிற்கே போக வட்டி கட்ட முடியாமல் திண்டாடுகின்றனர். இதனால் பல தற்கொலைகள் இன்று அதிகமாக நடைபெற்று வருகின்றது.

இதன் பிடியில் யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த சோமுவும் விதிவிலக்கல்ல.

தனது மகனை வெளிநாட்டு அனுப்பவேண்டும் என்ற மகனின் ஆசைக்கேற்ப
 தன்னிடம் இருந்த நிலபுலன்களை எல்லாம் வட்டிக்கு வைத்து பணத்தினைப் பெற்றுள்ளார். ஆனால் அவரின் மகன் இடையிலேயே பிடிபட அவர் சம்பளம் வீட்டுச் செலவுக்கே போக வட்டி குடியையே முழுங்கியது. வட்டி கட்ட முடியாமலும் அதிக தொகை  வர என்ன செய்வதென்றே தெரியாமலும் சோழு திகைத்தார். பணத்தினைக் கேட்டு கடன் காரர்கள் நெருக்க சோமு கிணற்றினுள் விழுந்து உயிரினை விட்டார்.

இன்று பொருளாதார ரீதியாக பல்வேறு மக்கள் சோழு மாதிரியே தமது முடிவினைத் தேடிக் கொள்கின்றனர். இதனால்தான் யாழ்ப்பாணத்தில் இன்று அதிகமாக தற்கொலைகள் நிகழ்கின்றது.

உடலில் ஏற்படும் நோய்க்கு மருத்துவரை நாடிச் செல்லும் மக்கள் மன ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும்  பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. ஆரம்பத்திலேயே பிரச்சனைக்கு மனநல ஆலோசகரிடம் சென்றால் கவன்சிலிங் மூலம் பிரச்சனைக்கான தீர்வினை மேற்க் கொள்ளலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

மனஅழுத்தத்தினால் தற்கொலைதான் முடிவு என்று நினைக்காமல் அதிலிருந்து விடுபட என்ன வழி என்று சிந்தியுங்கள்.

2 comments:

  1. i just reading ur story துயர் படிந்த கதைகள். அதிகரிக்கும் தற்கொலைச் சாவுகள் is really gud and keep it up expecting lot from u

    ReplyDelete
  2. the writer was quite emotional and her story describe her character i really lyk this துயர் படிந்த கதைகள். அதிகரிக்கும் தற்கொலைச் சாவுகள்…….?????? கதை – 04 if its a real story sad for him.

    ReplyDelete