flashvortex.

Wednesday, July 24, 2013

துயர் படிந்த கதைகள். அதிகரிக்கும் தற்கொலைச் சாவுகள்…….?????? கதை – 05

பெற்றவர்கள் இல்லை என்றால் சொந்தபந்தம் கூட இந்த காலத்தில் யாரையுமே பார்க்காது. தமது குடும்பத்தை பார்க்கவே  அவர்களுக்கு முடியாத போது சொந்தமாய் இருந்தாலும் மற்றவர்களின் குடும்ப சுமையை யார்தான் ஏற்க முன்வருவார்கள்.



தனக்காக வாழ்ந்த தாயையும் பறிகொடுத்து யாருமே இன்றி வாழ முடியாமல் தற்கொலை செய்து கொண்ட நிசாந்தின் கதை தான் இது.
என்ன நடந்தது இவன் வாழ்வில்? தற்கொலை செய்யும் அளவிற்கு போனதற்கான காரணம் தான் என்ன?

சிறு வயதிலேயே தனது தந்தையை பறிகொடுத்து தாயின் அரவணைப்பிலேயே வாழ்ந்து வந்தவனுக்கு தீடீரெனதாய் இவனை விட்டு போனால் என்ன செய்வான்?

இவனது தாய்சிறு சிறு தொழில் செய்து அக்கம் பக்கத்திடம் கடன்வாங்கித்
தான் இவனைப் படிக்க வைத்தார். இவனும் நன்றாகNவு படித்து வந்தான். யாரின் உதவியும் இன்றி தனியாக கஸ்ரப்பட்டு வந்தது இந்த குடும்பம். வீட்டு வாடகை, கரன்ட் பில், சாப்பாடு, இவனது படிப்பு செலவு, தாயின் மருந்து செலவு, அத்தோடு இதர செலவுகள், போன்ற பல செலவுகளை தாயின் சம்பளத்தில் தான் பார்க்க வேண்டிய சூழல். இதனால் மற்றவர்களிடம் கடனுமு; வாங்கினார்கள;.
நிசாந்தனின் தாயின் வருத்தம் அதிகாகி இறந்து விட அவன் செய்வதறியாது திகைத்தான். தாயின் இறுதிக் கிரியைகள் வரை சொந்தங்கள் எல்லாம் இருந்தது. ஆறுதல் சொல்ல வேண்டியவர்கள் இடையிலே விட்டு சென்று விட்டார்கள்.

பாவம் இந்த பிள்ளை. என்ன செய்வான். தாயே உலகம் என வாழ்ந்தவன். யமன் மங்களாக்காவை அழைத்து விட்டான். மங்களாக்கா வேலை செய்து தான் இவனை படிக்க வைச்சா. பிள்ளைக்கு வேலையும் இல்லை. கடன் கொடுத்தவர்கள் ஒரு கிழமையால வந்து கடனக் கேட்டார்கள். நான் தான் அவர்களை பேசி அனுப்பி வைத்தேன். தாயை பறி கொடுத்த சோகத்தில் அந்த பிள்ளை இருக்கு இந்த நிலையில் இவர்கள் கடனைக் கேட்கின்றனர் என்று அவர்களின் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த கனகாம்பிகை தெரிவித்தார்.

அவரு மேலும் கூறுகையில் நான் தான் அவனுக்கு சாப்பாடு கொடுப்பேன்யாருமே தனக்கு இல்லை உன்று கூறுவான். தாய் பட்ட கடனை தான் தான் அடைக்க வேண்டும் ஆனால் எப்படி அடைக்கிறது. நானும் செத்து போயிடனும் என்று கூறுவான். நான் அவனுக்கு ஆறுதல் கூறுவேன். ஆனால் தீடிரென ஒருநாள் தூக்கில் தொங்கிய நிலையில் தான் அவனைக் காண முடிந்தது. என்றார் பெருமூச்சு விட்டபடி.

எல்லோரும் அவன் தாய் இறந்த சோகத்தில்தான் இறந்திட்டான் என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த உலகமும் இந்த மனிதர்களும் காரணம் தான் என்று யாருக்கு தெரியும்.தாயை இழந்த நிலையில் ஆறுதல் கூறவேண்டியவர்கள் கையிட்டார்கள். இது மட்டுமா? கடனை கேட்டு கடன்காரர்கள் மனச்சாட்சி இல்லாமல் நடந்து கொண்டார்கள். இந்த நிலையில்தான் இவன் தற்கொலை இடம் பெற்றுள்ளது. தாயை இழந்த சோகத்தில் இருந்தவனிடம் கடனையும் கேட்டால் என்ன செய்வான்?
இவ்வாறு எத்தனை பேர் இருக்கின்றனர். இவர்களின் தற்கொலைக்கு பொருளாதார ரீதியான பிரச்சனைகள் ஒருபக்கம் இருக்க இந்த மனிதர்களும் ஒரு வகையில் காரணம் என்றால் அது மிகையாகாது.

No comments:

Post a Comment