வெளிநாட்டு மோகத்தினால் தன் நகையினை வங்கியில் வைத்து குடும்ப நிலைiயியையும் பாராது கணவன் சுதாகரனை அவுஸ்ரேலியா அனுப்பி வைத்தாள். கடலோடு வாழ்க்கை நடத்தி தினமும் வரும் பணத்தில் இவளது குடும்பம் அழகாக தான் ஓடிக்கொண்டிருந்தது.
வெளிநாட்டிற்கு கணவனை அனுப்புவதற்ககாக ஒரு தொகை பணத்தை வட்டிக்கு வங்கியில் புரட்டி தனது இறுதி முடிவிற்கு அடி எடுத்து வைத்தாள். கணவனும் அவுஸ்ரேலியா சென்றான். மீண்டும் அவளே அவுஸ்ரேலியாவில் இருந்து திரும்பி வரும்படி அழைத்ததாக மரியாவின் தங்கை தெரிவித்தாள். அவுஸ்ரேலியாவில் 3 மாத காலம் அகதி முகாமில் இருந்து மீண்டும் வந்து கடலுக்குள் மீன் பிடி தொழிலுக்காக சென்றான். கடலில் தொழிலுக்கு சென்று கிடைக்கும் வருமானம் ஒரு நாள் செலவிற்கே போனது. இதனால் வங்கியில் வாங்கிய கடன் தொகை கட்ட முடியாத சூழி நிலை உருவாகியது.மாதம் மாம் வட்டியினை கட்டும் படி வரும் துண்டுப்பிரசுரங்கள் அவளிடம் எஞ்சி இருந்த நகைகளையும் வங்கியில் வட்டிக்கு சேர்த்தது. காது தோடு மட்டும் எஞ்சி இருந்ததது.
வங்கி கடன் அதிகரிக்க அதிகரிக்க வீட்டில் இரு;ந்த மகிழ்சியினை சண்டையும் சச்சரவுகளும் மிஞ்சியது. இதனால் தனது மகளினையும் யோசிக்காது கோபததில் ஒரு நிமிடம் எடுத்த முடிவினால் நெருப்பிற்கு தீக்கிரை ஆகினாள். 'அவள் ஒரு நிமிடம் கூட சிந்திக்க வில்லை நானும் எனது பிள்ளையும் என்ன செய்வோம் என்று. நினைத்திருந்தாள் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்க மாட்டாள்.' என்று பெரு மூச்சு விட்ட படி கூறினார் மரியாவின் கணவர்.
பொருளாதார பிரச்சினைக்கு முகம் கொடுக்க முடியாமலும் வங்கியில் எடுத்த கடனை கட்ட முடியாமலும் அயவலரிடம் வாங்கிய கடனினை கட்ட முடியாமலும் தினம் தினம் திணறுகின்றனர் மக்கள். தமது வாழ்வாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் மக்கள் எடுக்கும் முடிவுகள் தற்கொலைகள் மட்டுமே. நாளாந்த வாழ்க்கையில் பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்க முடியாமல் தமது முடிவினை தாமே தேடிக்கொள்கின்றனர்.
நாளாந்த வாழ்வை கடப்பதற்கு ஒவ்வொரு நொடியும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் எத்தனை சிரமத்தை எதிர்கொள்கின்றனர். கடன் தொல்லை தாங்காது தம்து வாழ்க்கையை முடித்துகொண்டால் சரி கடன் தொல்லையில் இருந்த மீண்டுவிடுவோம் என்ற சிந்திக்கும் அளவிற்கு மக்களை பொருளாதார பிரச்சினை ஆட்கொண்டுள்ளது.




.jpg)
No comments:
Post a Comment