சர்வதேச விவகாரங்களில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் திருப்தி அடையக் கூடிய வகையில் அமையவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல விசனம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சிறீலங்காவிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கும், தென் சூடான் தொடர்பான சர்வதேச சமூகத்தின் நிலைப்பாட்டிற்கும் இடையில் ஒற்றுமை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Wednesday, April 4, 2012
தமிழீழத்தினை பெற்றுக் கொடுக்க பராக் ஒபாமா முயற்சி : சாடுகிறார் விமல்
ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் சிறீலங்காவிற்கு எதிராக பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றிகரமாக முறியடித்துள்ளார் என அமைச்சர் விமல் விரவன்ச தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனினால் நிறைவேற்றிக் கொள்ள முடியாதவற்றை அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவைக் கொண்டு நிறைவேற்றி கொள்ள எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Tuesday, April 3, 2012
மண வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருக மன்னிப்பு கேளுங்கள் !
நல்ல துணைவரைத் தேடுவதைப்போலவே நல்ல துணைவராக இருப்பது மிகவும் நல்லது. தம்பதிகளுக்குள் அகந்தை, மற்றவரின் உதவாத அறிவுரைகள் குழப்பத்தை உண்டு பண்ணும். தொழில் வேறுபாடுகள், தகுதி வேறுபாடுகள் பார்ப்பது, குறைகூறும் பெற்றோர் மற்றும் துணைவரால் தொல்லைகள் பெருகும். ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு உயர்விலும், தாழ்விலும், சுகத்திலும், துக்கத்திலும் காதலில் மகிழ்ந்திருந்தால் இல்லறம் நல்லறமாகும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
மனைவியை புறக்கணிக்காதீர்கள்! அவங்களுக்கும் மனசிருக்கு!
பெண்களைப்பற்றி சரியாக புரிந்து கொள்ளாமலேயே பெரும்பாலான ஆண்கள் “பெண்கள் ஒரு புதிர், அகம்பாவம் பிடித்தவர்கள்…’ என, அவர்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர். ஆனால் பெண்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல, அவர்கள் புறக்கணிக்கப்படுவதாலேயே வெறுப்படைகின்றனர் என்கின்றனர் மனோதத்துவ நிபுணர்கள். மனைவியோ, காதலியோ அவர்களை மகிழ்ச்சிப்படுத்த ஆண்கள் ஒரு சில விசயங்களை செய்தால் போதும் என்கின்றனர் அவர்கள்.
பெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் உற்சாகமாக இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். மனோதத்துவ நிபுணர்கள் கூறும் அறிவுரையை படியுங்களேன்.
பெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் உற்சாகமாக இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். மனோதத்துவ நிபுணர்கள் கூறும் அறிவுரையை படியுங்களேன்.
“லஷ்கர் இ தயிபா தலைவரை பிடித்தால் 10 மில்லியன் டாலர்கள்”
பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் லஷ்கர் இ தயிபா அமைப்பின் நிறுவனர் ஹஃபீஸ் முகமது சயீதை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 10 மில்லியன் டாலர்கள் பரிசுத் தொகையை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
லஷ்கர் இ தயிபா அமைப்பின் முகம் என்று பரந்துபட்ட அளவில் பார்க்கப்படும் ஜமாத் உத் தாவா அமைப்புக்கு தற்போது அவர் தலைவராக இருக்கிறார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு லஷ்கர் இ தயிபா அமைப்பே காரணம் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
எவரும், எமக்கு பாடம் புகட்ட தேவையில்லை : ஐனாதிபதி மஹிந்த காட்டம்
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சிபார்சுகளை நாம் நடைமுறைப்படுத்தவே முயற்சித்து வருவதாக ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கு உரிமை கோர சிலர் முயற்சிப்பதாக ஜனாதிபதி குற்றச் சாட்டியுள்ளார்.
பலாங்கொடையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலுயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசியல் தேவைகளுக்காக சிலர் நாட்டை சர்வதேசத்திடம் காட்டிக் கொடுக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறான வெளிச்சக்திகளின் அழுத்தங்களை முறியடிக்க அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பு அவசியம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

த.தே.கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா
அரசியல் தீர்வு தொடர்பில் சிறீலங்கா அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளிவிவகார அமைசச்ர் ஜி.எல் பீரீஸ் அமெரிக்காவிற்கு விஜயம் செய்வதற்கு முன்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்பினரை நாட்டுக்கு வருமாறு ஹிலாரி அழைப்பு விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பையின் மனித உரிமை பேரவையில் சிறீலங்காவிற்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவிற்கு வருகைதருமாறு வெளிவிவகார அமைச்சருக்கு அமெரிக்க இராஜங்க செயலாளர் அழைப்பு விடுத்திருந்தார்.

Subscribe to:
Posts (Atom)