பெற்றவர்கள் இல்லை என்றால் சொந்தபந்தம் கூட இந்த காலத்தில் யாரையுமே பார்க்காது. தமது குடும்பத்தை பார்க்கவே அவர்களுக்கு முடியாத போது சொந்தமாய் இருந்தாலும் மற்றவர்களின் குடும்ப சுமையை யார்தான் ஏற்க முன்வருவார்கள்.
Showing posts with label என்பேனா. Show all posts
Showing posts with label என்பேனா. Show all posts
Wednesday, July 24, 2013
துயர் படிந்த கதைகள். அதிகரிக்கும் தற்கொலைச் சாவுகள்…….?????? கதை – 04
எந்தவொரு மனிதனும் வாழ்வில் சந்தோசமாகவும் எல்லோரும் மதிக்கத்தக்கவகையிலும் வாழ வேண்டும் என்று எண்ணுகின்றான். அதற்கு பணமும் வழிவகுக்கின்றது. வாழ்வில் எல்லோரும் தங்களை மதிக்க வேண்டும் என எண்ணும் மனிதர்கள் பொருளாதார ரீதியிலும் உயரவேண்டும் என்று நினைக்கின்றனர். இதனால் என்ன கஸ்ரப்பட்டாவது தாம் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று தம்மிடம் இருக்கும் சொத்தினை வட்டிக்கு அடகு வைத்து தமது மகனை வெளிநாட்டிற்கு அனுப்புகின்றனர்.
துயர் படிந்த கதைகள். அதிகரிக்கும் தற்கொலைச் சாவுகள்…….?????? கதை – 03
வெளிநாட்டு; கனவில் ஆரம்பித்த இவள் படகேறிச்செல்ல தனது கணவனை அனுப்புவதற்காய் கடலோடு விளையாடிய யாழ் குருநகர் பகுதியை சேர்ந்த மரியா தீர்மாணித்தாள். இதனால் பறிபோனது இவள் உயிர் மட்டுமே. எங்கும் இதே கதை தான் தனது ஒன்றரை வயத மகளை விட்டு எவ்வாறு இப்படி ஒரு முடிவினை தேடிக்கொண்டாள் மரியா?
துயர் படிந்த கதைகள். அதிகரிக்கும் தற்கொலைச் சாவுகள்…….?????? கதை – 02
'எப்படித்தான் இந்த பிஞ்சுக்குழந்தையை விட்டுட்டு போக இவளுக்கு மனசு வந்திச்சுதோ? அந்த கடவுள் தான் காப்பாத்தி இந்த பிள்ளையளுக்கு தாய குடுத்திருக்கு' என்று ஒரு வயது சின்ன குழந்தையினை இடுப்பில் வைத்துக்கொண்டு அழ ஆரம்பித்தார் சோபா.
துயர் படிந்த கதைகள். அதிகரிக்கும் தற்கொலைச் சாவுகள்…….?????? கதை – 01
யுத்தம் முடிந்து நான்கு வருடங்கள் உருண்டோடி விட்டன. சாவுகள் வேதனைகள் இனி தமிழ்ச் சமூகத்தை சூழாது இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்ற காலமிது. பின்னங் கால் பிடரியில் பட படுதுயரங்களோடு பாதுகாத்து வந்த உயிர்கள் பக்குவமாய் பாதுகாக்கப்பட வேண்டியவைகள்.
Tuesday, October 30, 2012
புத்துயிர் பெற்றுவரும் நெசவுக் கைத்தொழில்
ஆடைகள் உடுபிடவைகள் போன்றவற்றிற்கு இந்தியாவை நம்பிக் கொண்டிருக்கும் இன்றைய தலைமுறை மக்கள் முப்பது வருடங்களுக்கு முன்னர் தாமே தமது ஆடைகளை நெய்து உடுத்த வரலாறுகள் உண்டு. அன்றைய காலத்தில் பரவலாக எல்லா இடங்களிலும் இந்த நெசவுக் கைத்தொழில் இருந்துள்ளன.
பள்ளி இல்லாத கிராமம் கல்விக்கு ஏங்கும் சிறுவர்கள்
தெல்லிப்பளை கொல்லங்கலட்டி 22 வருடங்களின் பின் தமது சொந்த மக்களை பார்த்து பூரித்து நின்றது. அப் பூரிப்பில் மக்களும்.
ஆனால் வளம் கொழிக்கும் இப் பூமியில் இன்னும் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மீள்குடியேறி உள்ளனர் மக்கள். இங்கு தான் 5வயது சிறுமியான குலக்சிகாவின் உள்ளிட்ட பல சிறுவர்களின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படப்போகிறது.
Tuesday, October 23, 2012
அழிவடைந்த நிலையில் இரு நூற்றாண்டுகள் பழமை மிக்க தேவாலயம்
தெல்லிப்பளை யூனியன் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள 196 ஆண்டுகள் பழமை வய்ந்த வரலாற்றுப் பெருமைமிக்க அமெரிகன் மிஷன் தேவாலயம் இன்று கவனிப்பாரற்றுக் கிடக்கிறது.
இன்னும்; நான்கே வருடங்களில் தனது 200 ஆவது வயதைத் தொடவுள்ளது இந்தப் பழம்பெரும் தேவாலயம்.
போர்த்துக்கேயர் இலங்கையை ஆண்ட காலப்பகுதியோடு இத்தேவாலயத்தின் வரலாறும் ஆரம்பிக்கின்றது.
மீள் குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வு மீளாதா??
நாட்டில் நடந்த யுத்தத்தின் பிறகு யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் மீள்குடியேற்றம் நடைபெற்று வருகின்றநிலையில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வாழ வேண்டிய சுழலுக்கு ஆளாகியுள்ளனர் அவ்வாறான ஒரு நிலையிலேயே தீவுப்பகுதி மக்களும் வாழ்ந்துகொண்டு வருகின்றனர்.
Sunday, October 14, 2012
வாழ்வும் சாவும்................
ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டேன். இறப்பதற்கும் தயாராகி விட்ட அந்த நொடி என்ன நினைத்து என்னை பிடித்திருந்த உடும்புக்பிடி நீங்கியதோ தெரியாது. மீண்டும் தப்பிவிடுவேன் என்ற எண்ணத்தோடு இரு கைகளினாலும் தண்ணீரை தள்ளினேன்.Wednesday, August 1, 2012
வீரமாகாளியில் வீரவாள்
யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த மன்னர்களுள் சங்கிலிய மன்னன் கடைசி மன்னன் ஆவான். வீரத்துக்கு பெயர் போன மன்னன் என்றால் மிகையாகாது. இம் மன்னனோடு தொடர்பு பட்ட கோயில்களில் நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயிலும் ஒன்று.; நல்லூருக்கு மேற்குத் திசையில் அமைந்துள்ள இக் கோயிலானது 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
Tuesday, May 29, 2012
ஏக்கங்களுடன் வாழும் தும்பளை கிழக்கு மக்கள்.
பிரச்சனைகள் எல்லோர்க்கும் வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே இருக்கும். இதற்கு மாறாக பிரச்சனைகயையே வாழ்க்கையாக கொண்டு வாழ்கின்றனர் தும்பளை கிழக்கு மக்கள்.
பருத்தித்துறையில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திலிருந்து அமைந்திருக்கின்றது தும்பளை கிழக்கு கிராமம். இங்கு 389 குடும்பங்கள் வாழ்வாதார வசதிகள் இன்றி வசித்து வருகின்;றமை கவலைக்குரிய விடயமாகும். இக் கிராமம் அதிகமான பிரச்சனைகளை எதிர்நோக்கிய வண்ணம் உள்ளன. இக் கிராமமானது 2004ம் ஆண்டு சுனாமியின் போது பாதிக்கப்பட்டது. இது ஒரு கரையோர குடியிருப்பாகும்.
இல்லாத ஒன்றிற்கு எதற்காக தினம்??
நூறாயிரம் போர்வீரர்களின் துப்பாக்கி முனையில் செருகப்பட்டிருக்கும் கூர்மையான கத்தியைவிட செய்தித்தாள்களைக் கண்டு நான் பயப்படுகின்றேன்' என்றார் நெப்போலியன்.
இவர் கூறிய வார்த்தைகளுக்கு மாறாக இன்று ஊடகவியலாளர்களைப் பார்த்து பயப்படும் காலம் போய் ஊடகவியலாளர்கள் இந்த உலகத்தில் பயந்தே வாழவேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றனர்.
இன்றைய காலகட்டத்தல் ஒரு ஊடகவியலாளன் தனது கருத்துக்களை சுதந்திரமாக வைக்கமுடியாத சூழலே நிலவுகின்றது.அரசாங்கத்திற்க்கு எதிராக ஒரு கருத்தை முன்வைக்கும் போதே ஊடகவியலாளர்கள் மீது எல்லோர் மீதும் பார்வை திரும்புகின்றது.அடுத்த கணம் அந்த ஊடகவியலாளன் 'கடத்தப்பட்டார் அல்லது தாக்கப்பட்டார்' என்ற செய்தி வெளிவரும்.
இப்படியே குறைந்தால் இறுதிக்கிரியை என்னவாகும்?
சிறுவர்களின் எண்ணங்களை வெளிக் கொண்டுவந்த 'எனது உலகு' கண்காட்சி
Sunday, May 6, 2012
சமூகத்தினால் தன்னிலை இழந்த தப்பாட்டம்
காலத்தின் மாற்றத்திற்கேற்ப இந்த உலகமும் மாறிக் கொண்டு வருகின்றது. பழமையை மறந்து புதுமையை நாடுகின்றனர் மக்கள். இதனால் 'பழையன களைதலும் புதியன புகுதலும்' என்ற முதுமொழி தற்போது வலுப் பெற்று வருகின்றது. பெரியோர்கள் எதற்கு சொன்னார்களோ தெரியாது ஆனால் தற்கால நடைமுறைக்கு இது சாத்தியம் ஆகியுள்ளது. இதற்க்கு பறை சிறந்த எடுத்துக்காட்டு.பறை தமிழர்களின் பாரம்பரிய கலை ஆகும். இப் பாரம்பரிய கலை இன்று சமூகத்தினால் ஒடுக்கப்பட்டு எல்லோராலும் தாழ்த்திப் பார்க்கப்பட்டு வருகின்றது. இப் பறையை தப்பாட்டம் என்று அழைப்பர்.
கருத்து சுகந்திரம்
ஒருவர் தான் விரும்பிய கருத்தை வெளியிடவும் பகிர்ந்து கொள்ளவும் ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் உரிமை உள்ளது. உரிமைகளும் சுகந்திரங்களும் என உலக நாடுகளில் மத்தியில் கூறிக் கொள்ளும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு நாட்டில் மக்களின் வாய்கள் கட்டப்பட்டுள்ளது யாருக்கு தெரியும்?
யுத்தம் முடிவடைந்த பின்னர் ஜனநாயகம் நிலைத்து விட்டது. மக்களுக்கு பூரண சுகந்திரம் இருக்கின்றது எனக் கூறப்படுகின்றது. ஆனால் மக்கள் சுகந்திரமாக தமது கருத்துக்களை கூற முடியாத நிலையே காணப்படுகின்றது. தற்போதைய சூழ்நிலையில் யாழ்ப்பாணத்து மக்கள் அரசியல் அரசாங்கத்துக்கு எதிராக தமது கருத்துக்களை கூற மறுக்கின்றனர்.
Sunday, April 1, 2012
ஆதரவு தேடும் அன்பு தந்த கரங்கள்
சிறுவயது முதல் கண்ணை இமை காப்பது போல அந்திபகலாய் ஆதரித்து இன்று ஆதரிக்க யாருமின்றி பல துன்பங்களுடனும் ஏக்கங்களுடனும் வாழும் எம் உறவுகளாம் முதியவர்களின் நிலையை யார் தான் கண்டு கொள்கிறார்கள்.
பத்து மாதம் வயிற்றிலே சுமந்தாள் அன்னை. நெஞ்சிலே சுமந்தார் தந்தை. இவர்களை சுமக்க யாரும் இல்லாமல் முதியோர் இல்லங்களே இருக்கின்றன சமுதாயத்திலே....
வாழ்க்கைக்கு வித்திட்டு வாழ்வாங்கு வழிகாட்டி வாழ வைத்த தொழுகைகுரியவர்களை இன்றைய தலைமுறைகள் கண்ணெடுத்தும் பார்க்காமல் வயோதிபர் என பட்டம் சூட்டி இன்று வயோதிபர் இல்லங்களுக்கு அனுப்பி விடுகின்றனர்.
Thursday, March 8, 2012
பாரதியின் கனவு நிறைவேறியது
'பட்டங்கள் ஆழ்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டுமருவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி' என்று கூறிய பாரதியார் இன்று இல்லாவிடினும் அவர் கூறிய கருத்து உண்மையாகிவிட்டது.
Wednesday, February 15, 2012
My first day at school
I was five years old. My father and mother told me one day. That I was a big girl and it was high time that I want to school. I was very sad. Because I was very happy with my friends in the pre- school.. but my parents said that my pre-school period was over and I had to go to school. Within one week my mother sewed a new uniform for me and she bought me a pair of white shoes and a new school bag.
On this first day I was adamant to get ready to school. I cride aloud. But my mother coaxed me and dressed me, combed my hair and clipped on a bow on my hair. My father came with his camera and took a photograph for me. He took me to my new school. He walked with me holding my hand to wards the grade one classroom. Because in the pre-school we did not have classrooms as such. My father spoke to my class teacher and went off.
Subscribe to:
Posts (Atom)








