flashvortex.

Friday, March 23, 2012

சிறீலங்கா மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தியது அமெரிக்கா

வான் மற்றும் கடலோர கண்காணிப்பு உபகரணங்களை சிறீலங்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் அமெரிக்கா உடனடியாகத் தளர்த்தியுள்ளது. 

இதன்படி ஆயதங்கள் பொருத்தப்படாத கண்காணிப்புப் படகுகள், கமராக்கள்,  ஒளி விமானம், மற்றும் இதனுடன் தொடர்புடைய கருவிகள் ஏற்றுமதிக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.

பிரபாகரனை காக்க அமெரிக்கா முயற்சித்ததாம்!! : விமலின் புதுக் கதை

நந்திக்கடல் களப்பில் இறுதி போர் நடைபெற்ற சந்தர்ப்பத்தில், கொழும்பில் மற்றுமொரு யுத்தம் நடைபெற்றதாகவும் கொழும்பில் நடைபெற்ற யுத்தத்தை ஜனாதிபதி எதிர்கொண்டதால், நந்திக்கடல் களப்பில் நடந்த யுத்தத்தில் படையினர் வெற்றிப்பெற முடிந்ததாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத்தை தோற்கடிக்கும் இறுதி கட்டத்தில், அமெரிக்கா, பிரித்தானியா, நோர்வே உட்பட பல நாடுகள் ஜனாதிபதிக்கு கடும் அழுத்தங்களை கொடுத்தன.  சர்வதேச சமூகம் தமது சுவர்களில் நமது கால்களை கட்டி வைத்திருந்தனர். அந்த விலங்கை உடைத்தெறிந்து விட்டு, முன்னோக்கி சென்று, பயங்கரவாதத்தை முற்றாக எம்மால் தோற்டிக்க முடிந்தது. அப்போது, இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக இருந்த ரொபர்ட் ஓ பிளேக் குறுஞ் செய்தி அனுப்பி, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக பிரபாகரனை காப்பற்ற முயற்சித்தார்.

சிறீலங்காவை, இந்தியா எதிர்த்தமைக்கான காரணம் என்ன?

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்துள்ளது.இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களிப்பதற்கான காரணங்களை ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இந்தியப் பிரதிநிதி விளக்கியிருந்தார்.

இலங்கையின் படிப்பினைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகளை இந்தியா வரவேற்றிருந்தது.

இலங்கையில் வாழும் அனைத்து இன மற்றும் மதக்குழுக்களுக்கும் மதிப்பளிக்கும் வகையிலான அரசியல் தீர்வு மூலமான நல்லிணக்கத்தை அந்நாட்டில் கொண்டுவருவதற்கு இந்த பரிந்துரைகள் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திதருவதாய் இந்தியா நம்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் தீர்வை இலங்கை அரசாங்கம் ஆர்வத்துடன் தலைமையேற்று முன்னெடுக்க வேண்டும் என இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

சிறீலங்காவிற்கு புத்துயிர் அளிக்கும் ஜெனிவா தீர்மானம் : ஹிலாரி கிளின்டன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இன்று மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் 27 வருட யுத்தத்திற்கு பின்னர் சிறீலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு புத்துயிரளிக்கும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்தார்.

சிறீலங்கா தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை ஒன்பது மேலதிக  வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

தீர்மான வெற்றி குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Thursday, March 22, 2012

டில்சான் தொடர்பான செய்திக்கு இலங்கை கிரிக்கெட் சபை கவலை

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சகல துறை வீரருமான டி.எம்.திலகரட்ண டில்சான் தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திக்கு இலங்கை கிரிக்கெட் சபை கவலை வெளியிட்டுள்ளது. 

வாழும் நீல மனிதன்!! கிருஸ்ணரின் அவதாரமா?? - வீடியோ இணைப்பு

நீல மனிதர்கள் இவர்களைப்பற்றி சிலர் ஏற்கனவே கேள்விப்பட்டிருப்பீர்கள், மேலதிக உண்மையான தகவல்களுடன் தருகின்றோம்.
1960 ஆம் ஆண்டளவில் Kentucky  எனும் நகரின் மலைப்பகுதியில் இணங்கானப்பட்ட இவர்களின் குடும்பத்தார் அனைவருமே நீல நிறத் தோலை உடையவர்கள். 
உடலில் உள்ள மெலனின் எனும் பதார்த்தமே நமது உடலிற்கு நிறத்தைக்கொடுக்கின்றது. அவ் மெலனினின் ஜீன் கட்டமைப்பில் ஏற்பட்ட மரபணுக்குறைப்பாடே இந்த வகையான மனிதர்கள் தோன்றக்காரணம். 
 

இலினாய்ஸ் மாகாணத்திலும் மிட் ரூம்னி வெற்றி

அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் போட்டியில் குடியரசு கட்சியின் மிட் ரூம்னி வெற்றி பெற்றுள்ளார். அவர் குடியரசு கட்சியின் ரிக் சாண்ட்ரோமை விட 12% வீத வாக்குகள் அதிகம் பெற்று இவ்வெற்றியை பெற்றுள்ளர்.

இதன் மூலம் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஒபாமாவை எதிர்த்து மிட் ரூம்னி களமிறங்குவது, ஓரளவு உறுதியாகியுள்ளது.