யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தின் முழுநேர நான்காம் அணி மாணவர்களாகிய நாம் உள்ளகப் பயிற்சிக்காக கொழும்பு சென்றிருந்தோம்.
செல்லும் நாளுக்கு ஒரு வாரத்திற்க்கு முதலே ஆயத்தங்கள் செய்யத் தொடங்கிவிட்டோம். கொண்டு செல்லும் பொருட்கள் யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு?, பண விடயம், உணவு ஏற்பாடு என சகல விடயங்களும் செல்வதற்க்கு இரு நாட்களிற்க்கு முதல் இடம்பெற்ற கூட்டத்தில் பேசப்பட்டது.
செப்ரெம்பர் மாதம் 6ஆம் திகதி.அன்று மாலை சுமார் 4.30 மணியளவில் மாணவர்கள் அனைவரும் ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தில் ஒன்றாகினோம். .எம்மை வழியனுப்பி வைப்பதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடப் பேராசிரியர் ஞானகுமாரன் அவர்கள் வந்திருந்தார்.
இரவு 7.30 மணியளவில் யாழிலிருந்து கொழும்பை நோக்கிப் புறப்பட்டோம் செப்ரெம்பர் 07 கொழும்பில் கண்விழித்தோம். எமக்கென பதிவுசெய்யப்பட்ட கொழும்பு தழிழ்ச்சங்க விடுதியினுள் சென்றோம்.


















