யூரோ நாடுகளின் கடன் நெருக்கடியை சமாளிப்பதற்காக உடன்படிக்கை யூரோ நாணயம் புழங்கும் நாடுகளில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில் தத்தமது நாடுகளின் வரி விதிப்பிலும், வரவு செலவுத் திட்டத்திலும் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவதற்கான ஒரு திட்டத்துக்கு யூரோ புழங்கக்கூடிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உடன்பட்டுள்ளன.
Friday, December 9, 2011
இத்தாலியில் மாஃபியா கும்பல் தலைவர் பிடிபட்டார்
இத்தாலியில் கமோர்ரா எனப்படும் சட்டவிரோத குற்ற வலயமைப்பின் மிகச் சக்திவாய்ந்த தலைவரான மைக்கேல் ஸகாரியா என்பவரைத் தாங்கள் பிடித்துள்ளதாக அந்நாட்டின் பொலிசார் கூறுகின்றனர்.
கடந்த பதினாறு வருடங்களாக இவர் சட்டத்தால் தேடப்பட்டு வந்த ஒரு நபர்.
நேப்பில்ஸ் நகரருகேயுள்ள தனது சொந்த ஊரில் நிலத்தடியில் இருந்த ஒரு ரகசிய அறையிலிருந்து இவர் பிடிபட்டார்.
கமோர்ரா குற்ற வலயமமைப்பில் உள்ள ஒன்றான கஸாலெஸி பிரிவின் தலைவர் இந்த ஸகாரியா ஆவார்.
கடந்த பதினாறு வருடங்களாக இவர் சட்டத்தால் தேடப்பட்டு வந்த ஒரு நபர்.
நேப்பில்ஸ் நகரருகேயுள்ள தனது சொந்த ஊரில் நிலத்தடியில் இருந்த ஒரு ரகசிய அறையிலிருந்து இவர் பிடிபட்டார்.
கமோர்ரா குற்ற வலயமமைப்பில் உள்ள ஒன்றான கஸாலெஸி பிரிவின் தலைவர் இந்த ஸகாரியா ஆவார்.
கூடுதலான பொருளாதார கட்டுப்பாடுகளுக்கு யூரோ நாணய நாடுகள் உடன்பட்டன
Tuesday, December 6, 2011
மின்சாரம் தாக்கி யானைகள் மரணம்
இலங்கையில் அம்பாறை மாவட்டம் வீரகொடை 17 ம் குடியேற்ற கிராமத்தில் திங்கட்கிழமை நள்ளிரவு மின்சாரம் தாக்கி இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.Friday, December 2, 2011
எய்ட்சால் பாதிக்கப்பட்டோரை காக்க விரைவில் புதிய சட்டம் : ஆசாத் உறுதி
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, டில்லியில் நேற்று விழா நடந்தது. இதில், பங்கேற்ற மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத், செய்தியாளர்களிடம் கூறியதாவது: எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றவர்களால் பாகுபாடாக நடத்தப்படுவது வருத்தம் அளிக்கிறது.
Thursday, December 1, 2011
மைக்கேல் ஜாக்சன் குடும்ப டாக்டருக்கு 4 ஆண்டுகள் சிறை ; நியூயார்க் கோர்ட் உத்தரவு!
பிரபல பாப் பாடகர், மைக்கேல் ஜாக்சன் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அவரது குடும்ப டாக்டர் கான்ராட் முர்ரேக்கு, நான்கு ஆண்டுகள், சிறைத் தண்டனை விதித்து, நியூயார்க் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் நேற்று முன்தினம் சிறையில் அடைக்கப்பட்டார்.என்ன நடந்தது? : கடந்த 2009, ஜூன் 25ம் தேதி, மைக்கேல் ஜாக்சன் மரணம் அடைந்தார். அவர் இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன், அவரது குடும்ப டாக்டர் கான்ராட் முர்ரே, 58, அவரைப் பரிசோதித்து விட்டுச் சென்றார். பிரேத பரிசோதனையில், அளவுக்கு அதிகமாக, "ப்ரோபோபோல்' என்ற வலி நிவாரணி அவர் உடம்பில் இருந்தது தெரியவந்தது.
சர்வாதிகாரி ஸ்டாலின் மகள் அமெரிக்காவில் காலமானார்
முன்னாள் சோவியத் ஒன்றிய சர்வாதிகாரியான காலஞ்சென்ற ஜோசஃப் ஸ்டாலினின் ஒரே மகளான ஸ்வெட்லானா அமெரிக்காவில் முதியோர் இல்லம் ஒன்றில் தனது 85 வயதில் காலமாகியுள்ளார். நவம்பர் 22ஆம் தேதி அவர் வயிற்றுப் புற்றுநோயால் இயற்கை எய்தியுள்ளார்.
அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் பனிப்போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் 1967ல் ஸ்வெட்லானா சோவியத் யூனியனிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தது அச்சமயம் சோவியத்துக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது.
Subscribe to:
Posts (Atom)




